திமுக தலைவர் பதவிக்கு கருணாநிதிக்காக மா.செக்கள் போட்டி போட்டு மனு.. ஸ்டாலின் பெயரிலும் மனு!
சென்னை: தி.மு.க தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு இன்று வேட்பு மனுதாக்கல் மற்றும் தேர்வு நடைபெற்றது.
தி.மு.க. தலைவராக கருணாநிதி, பொதுச் செயலாளராக க.அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயரில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
காலை 10.30 மணிக்கு வேட்பு மனு தொடங்கியது. ஒவ்வொரு பதவிக்கும் ரூபாய் 25 ஆயிரம் டெபாசிட் செலுத்தப்பட்டது.
Filed the nomination for the post of Treasurer in the 14th DMK party election. pic.twitter.com/2j8TpGcBsw
— M.K.Stalin (@mkstalin) January 7, 2015 சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களை முன்மொழிந்து மனுதாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனுக்களை நிர்வாகிகள் ஆர்.டி.சேகர், கட்பிஸ் பழனி, மணலி துரை, சுந்தர்ராஜன், ஏ.டி.மணி, ஜெயராமன், துக்காராம், பரந்தாமன், அறிவழகி, அருள்அரசன், இரா.முருகேசன், சிவசங்கரன், மேனகா, நித்தியானந்தம், குறிஞ்சி கணேசன் ஆகியோர் வழி மொழிந்தனர்.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோரும் கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் பெயரில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்தனர்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் மேளதாளத்துடன் வந்து தி.மு.க. தலைவர் பதவிக்கு கருணாநிதி பெயரிலும், பொதுச் செயலாளர் பதவிக்கு அன்பழகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரிலும் அறிவாலயத்தில் மனுதாக்கல் செய்தார்.
அவருடன் மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, விசுவநாதன், கலைவாணி காமராஜ், அன்புச் செழியன், பழனிச்சாமி, பெருங்களத்தூர் சேகர், படப்பை மனோகரன், தமிழ்மணி, எம்.கே.தண்டபாணி, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தரும் இதே போல் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் பெயரில் மனு செய்தார். அவருடன் நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக வந்திருந்தனர்.
இந்த 3 பதவிகளுக்கும் அவர்களை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் தி.மு.க தலைவராக கருணாநிதி, பொதுச் செயலாளராக அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தி.மு.கவினர் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தலைமை பொறுப்புகளுக்கு மீண்டும் கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் வர வேண்டும் என்பதில் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அதனால் அறிவாலயத்தில் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி ஏராளமான தொண்டர்களும் குவிந்தனர்.












Click it and Unblock the Notifications