Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகதான் அதிமுக எம்எல்ஏக்களை திருடி திருட்டுத்தனமாக ஆட்சியமைக்கப் பார்க்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

திமுகதான் அதிமுக சட்டசபை உறுப்பினர்களை திருடி ஆட்சியமைக்கப் பார்க்கிறது என பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுகதான் அதிமுக சட்டசபை உறுப்பினர்களை திருடி ஆட்சியமைக்கப் பார்க்கிறது என பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக கொல்லைப்புற வாசல் வழியாக நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஏற்படும் குழப்பங்கள் , டிடிவி தினகரன் கைது உள்ளிட்ட சம்பவங்களுக்கு பாஜகதான் காரணம் என தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதிமுகவை உடைக்கவும், தமிழகத்தில் காலூன்றவும் பாஜக முயற்சிப்பதாகவும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

பலமான முதல்வர் தேவை

பலமான முதல்வர் தேவை

அப்போது தமிழகத்திற்கு தற்போது ஒரு பலமான முதல்வர் வேண்டும் என அவர் கூறினார். தமிழகத்தில் நேர்மையான முறையில் பாஜக வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கழகங்கள் இல்லாத தமிழகம்

கழகங்கள் இல்லாத தமிழகம்

கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாகும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும் அதிமுக 5 ஆண்டு கால ஆட்சியை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

திமுகதான் திருட்டுத்தனமாக..

திமுகதான் திருட்டுத்தனமாக..

மேலும் அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, திருடி திமுக தான் திருட்டுத்தனமாக ஆட்சியமைக்கப்பார்க்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திமுகவின் திருவிளையாடல்

திமுகவின் திருவிளையாடல்

திமுகதான் இந்த திருவிளையாடலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பாஜக கொல்லைப்புற வாசல் வழியாக நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஸ்டாலினுக்குப் பதில்

ஸ்டாலினுக்குப் பதில்

தமிழகத்தில் குறுக்கு வழியில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாகவும், அதிமுகவை உடைக்க சதி செய்வதாகவும்ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+