உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளை மாற்ற வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு
சென்னை: உளவுத்துறை ஐஜி சத்யமூர்த்தி, உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா உள்ளிட்டோரை இடமாற்றம் செய்யக் கோரி திமுக சார்பில் தேர்தல் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். தேர்தல் ஆணையமும் பணப்பட்டுவாட உள்ளிட்ட விதிமுறைகளை மீறுவோர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்நிலையில் திமுக சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அக்கட்சியின் சட்டப் பிரிவு இணை செயலாளர் பரந்தாமன் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் முதலமைச்சர் தொகுதி உட்பட அனைத்து அமைச்சர்கள் தொகுதிகளிலும், பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படும் ஆர்டிஒ, தாசில்தார் ஆகியோர்களை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்தல் பணிகள் அல்லாத துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல், உளவுத்துறை ஐஜி சத்யமூர்த்தி, உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்களுடன் தொடர்பில் இருக்கும் சேலம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications