Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேறுகால விடுப்பு 9 மாதம்...: மகப்பேறு நிதி உதவி ரூ.18000- மகளிரை கவர திமுக அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மகப்பேறு நிதி உதவி ரூ. 18000 ஆக உயர்த்தப்படும் என்றும்,
கருவில் இருக்கும் குழந்தைக்கும், கர்ப்பிணிகளுக்கும் காப்பீடு செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி. பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தி மகளிரைக் கவரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது திமுக.

சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை ஞாயிறன்று வெளியானது. அதில் முதியோர், மகளிரைக் கவரும் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

DMK poll manifesto: Maternity leave for women to extended to 9 months

முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும். பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம் அளிக்கப்படும். முதியோருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை அளிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மகளிரைக் கவரும் வகையில் பேறுகால விடுமுறை 9 மாதமாக உயர்த்தப்படும். மகப்பேறு நிதி உதவி ரூ. 18000 ஆக உயர்த்தப்படுவதாகவும், கருவில் இருக்கும் குழந்தைக்கும், கர்ப்பிணிகளுக்கும் காப்பீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளிய, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள கருவுற்ற தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிதியுதவி ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 2011 முதல் ரூ.12 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம், முதல் தவணையாக கருவுற்ற 7ஆவது மாதத்தில் நல்ல முறையில் உடல் நலனைப் பேணுவதற்காக ரூ.4,000, 2-ஆவது தவணையாக அரசு, உள்ளாட்சி மருத்துவமனைகளில் குழந்தை பிறந்த நாளன்று ரூ.4,000, மூன்றாவது தவணையாக குழந்தைக்கு 3-ஆவது தடுப்பூசி போடும் நாளன்று ரூ.4,000 என ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த உதவித் தொகையைப் பெற கருவுற்ற பெண் 19, அதற்கும் மேலான வயதுடையவராகவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும். முதல் 2 பிரசவத்துக்கு மட்டுமே இந்தத் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இலங்கை அகதிகளாக உள்ள தாய்மார்களுக்கும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகளுக்கும் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் திமுக வெளியிட்டுள்ள சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் மகப்பேறு நிதி உதவி ரூ. 18000 ஆக உயர்த்தப்படுவதாகவும், கருவில் இருக்கும் குழந்தைக்கும், கர்ப்பிணிகளுக்கும் காப்பீடு செய்யப்படும் என்றும் மகப்பேறு விடுமுறைக்காலம் 9 மாதகால அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+