அப்துல்கலாம் மறைவையொட்டி தி.மு.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைப்பு.. தலைமைக் கழகம் அறிவிப்பு
சென்னை : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இறுதிச் சடங்கை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி வரை நடைபெற இருந்த தி.மு.க. நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அப்துல்கலாம் உடல் புதன் கிழமை (29-07-2015) ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு அங்குள்ள பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. வரும் 30 ஆம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இதனை முன்னிட்டு தமிழக அரசு 30 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்துல் கலாம் மறைவையொட்டி தி.மு.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் போரூர் நாற்சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உயர்மட்ட மேம்பாலப் பணிகளை உடனே தொடங்கவும், போரூர் ஏரியை அகலப்படுத்த வலியுறுத்தியும் நாளை (29-07-2015) நடைபெற இருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அந்த ஆர்ப்பாட்டம் வரும் 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் தி.மு.க. அறிவித்துள்ளது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications