காவிரி : திமுக சார்பில் நாளை நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நாளை நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : காவிரி விவகாரத்தில் நாளையும் விசாரணை நடக்க இருப்பதால், நாளை நடக்க இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக தள்ளி வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீட்டிற்கான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, மே 14ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், மத்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங், திட்ட வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து இருந்தார்.

இதுதொடர்பாக இன்று மீண்டும் விசாரணை வந்த வழக்கில், காவிரி அமைப்பின் தலைமையிடத்தை டெல்லியில் அமைக்க வேண்டும் என்பது, உள்ளிட்ட பல முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நாளையும் நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், நாளை காவிரி விவகாரம் தொடர்பாக நடக்க இருந்த திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள குறிப்பில், காவிரி விவகாரத்தில் நாளையும் விசாரணை நடக்கவுள்ளதால், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications