8 வழி சாலை- விவசாயிகள் மீதான அடக்குமுறையை கண்டித்து சேலத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் மீதான அடக்குமுறையை கண்டித்து சேலத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
Recommended Video

சேலம்: சேலம்- சென்னை 8 வழி சாலையை கண்டித்து திமுகவினர் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு எட்டு வழி சாலை திட்டம் கட்டாயம் நடைபெறும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் அவ்வழியில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.

கருப்பு கொடி
இதை கண்டித்து விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் வந்த ஆட்சியரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளையும் கருப்பு பலூன்களையும் வீசியதை அடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அடக்குமுறை
சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அப்போது திமுக நிர்வாகிகள் பேசுகையில் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவி நிலத்தை பறிக்கின்றனர்.

ஆடு மாடுகளுடன் பங்கேற்பு
பசுமையை அழித்துவிட்டு பசுமை வழிச்சாலை என பெயரிடுவதா. தாமும் ஒரு விவசாயி என்று கூறிக் கொண்டு நிலங்களை அழிக்கிறார் எடப்பாடி. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது சேலத்துக்கு சாபகேடு என்று கடுமையாக விமர்சித்தனர். இந்த போராட்டத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளுடன் பங்கேற்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications