வெள்ளம்: தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஜன.5-ல் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: பெருமழை வெள்ளத்தின் போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஜனவரி 5-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்துள்ளது.
சென்னையில் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மழை வெள்ளத்தின் போது அலட்சியமாக இருந்த தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் வரும் 5- ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளின் போது பழந்தமிழர் விளையாட்டான ஏறுதழுவுதல் என்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு எந்த ஒரு தடையும் இல்லாமல் நடத்திட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மான விவரங்களை தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தி.மு.க. ஆலோசனைக் கூட்ட தீர்மான விவரங்கள்:
ஜெயலலிதா அரசின் ஊழல் நிர்வாகத்தில் மற்றும் ஒரு சோதனையாக தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளத்திற்கும் - அந்த வெள்ளத்தை எதிர்கொள்கிற வகையில் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் தரப்பட்ட எச்சரிக்கை அறிவிப்புகளையும் இலட்சியம் செய்யாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழக்கவும், உடைமைகளை இழக்கவும், நடுத்தெருவில் நாடோடிகளாக திரியவுமான நிலைக்கு ஆட்பட்டு அனாதைகளாக ஆகவும் காரணமான நிர்வாகக் கோளாறு மிகுந்த ஜெயலலிதாவின் அலட்சியமும், அந்த அரசிலே பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் நடத்திய தாறுமாறான நிர்வாகமும் இணைந்து மாபெரும் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்து விட்டது.
வரலாறு காணாத இந்த வெள்ளப் பெருக்கைத் தடுத்து நிறுத்தியோ அல்லது நிர்வாகத்தில் சீர்கேடு வராமல் பாதுகாக்கவும் தகுதி அற்றதும், சக்தி அற்றதும், அக்கறை அற்றதுமான - "அம்மா" புராணம் பாடிக் கொண்டிருந்த அ.தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்பது இந்தக் கொடிய நிகடிநச்சியின் மூலமாக பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு விட்டது.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் உரிய நேரத்தில் தண்ணீரைத் திறக்காமல், அதற்கான அனுமதியை வழங்காமல் தாமதப்படுத்தி, அதன் காரணமாகத் தான் சென்னையில் மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு, மனித இழப்புகளும், கோடிக்கணக்கான ரூபாய் இழப்புகளும் ஏற்பட வழி வகுத்தது என்பதை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், வல்லுநர்களும் விடுத்த அறிக்கைகள் தெளிவாக்கியுள்ளன.
இது குறித்து முறையான நீதி விசாரணை வேண்டுமென்று தமிழக ஆளுநரை கருணாநிதி சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். ஆளுநர் அவர்களும், அந்தக் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இன்று வரை அந்தக் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
அது மாத்திரமல்ல, இந்த அரசின் சார்பாக வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், அ.தி.மு.க. வினர் கொடுக்கின்ற பட்டியலிலே உள்ளவர்களுக்கே நிவாரணம் வழங்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளன.
தமிழகத்திலே நடந்து விட்ட நாசங்களுக்கும், இழப்புகளுக்கும் இந்த ஆட்சியை நடத்தும் அ.தி.மு.க. தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 5-1-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை மாநகரில் கருணாநிதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றுஇந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் கட்சிப் பாகுபாடின்றி கலந்து கொண்டு, அ.தி.மு.க. ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் முழக்கங்களை உரக்க எழுப்ப வேண்டுமென்றும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு
ஆண்டு தோறும் பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்ற வழக்கத்தை உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம், அவ்வாறே தமிழர் திருநாளை சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி அவ்வாறே தமிழர் திருநாளை சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வந்தது. அந்தத் திருநாளையொட்டி, சிறப்பு நிகழ்ச்சியாக பழந்தமிழர் காலத்திலிருந்து கடைப் பிடிக்கப்பட்டு வரும் "ஜல்லிக்கட்டு" நிகழ்ச்சியை கடந்த ஆண்டுகளில் அரசின் சார்பில் தடுத்து நிறுத்துவது போல அல்லாமல்,
இந்த ஆண்டு எந்தவிதமான தடையும் இல்லாமல் தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் வகையில், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வகையில், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஜல்லிக்கட்டு-ஏறுதழுவல் நிகழ்ச்சியை ஏறுதழுவல் நிகழ்ச்சியை எந்தவிதமான தடையும் வராமல் நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது. பொறுப்பேற்க வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications