ஆர்கே நகரில் காவல்நிலையங்கள் முற்றுகை... பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை என திமுக போராட்டம்!
ஆர்கே நகரில் காவல்துறையினரின் உதவியுடன் பண விநியோகம் நடப்பதாக குற்றம்சாட்டி திமுகவினர் காவல்நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

சென்னை : காவல்துறையினரின் உதவியுடன் பணப்பட்டுவாடா நடக்கும் நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி திமுகவினர் காவல்நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யும் பணி இறுதிக்கட்டமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும 4 நாட்களே உள்ள நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் பலரின் வீடுகளில் கட்டுக்கட்டாக பணத்தை மறைத்து வைத்திருப்பதாக திமுகவினர் நேரில் அவர்களே களத்தில் குதித்து வீடுவீடாக சென்று பணம் பதுக்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஆர்கே நகர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தொகுதி முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகள் கரைபுரண்டோடுகின்றன. அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் ரூ. 20 லட்சம் பதுக்கப்பட்டிருப்பதாக அவருடைய வீட்டை திமுகவினர் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அந்த வீட்டின் முன் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அதிகாரி இன்னும் இந்த வீட்டிற்கு வராத நிலையில் பணத்தை சம்பந்தப்பட்ட நபர்இடமாற்றம் செய்துவிட்டதாக திமுகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஆர்கே நகரில் ஆங்காங்கே போலீசாரின் உதவியுடன் ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஆர்கே நகரில் ஆங்காங்கே காவல் நிலையங்களை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்திற்குள் ஊடகங்களுடன் நுழைந்து பண விநியோகம் செய்பவர்கள் மீது புகார் பதிய வலியுறுத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார். ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்த போது காவல்துறையினர் வழக்கு பதியவில்லை, அமைச்சர்கள் வீதி வீதியாக முகாமிட்டு பண விநியோகம் செய்து வருவதாகவும் மருதுகணேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications