For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இட ஒதுக்கீடு பிரச்சினை: ஜன-21.ல் போராட்டம்: திமுக

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகள், அலுவலர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை கண்டித்து ஜனவரி 21-ல் திமுக போராட்டம் நடத்த உள்ளது.

தென் சென்னையில், திமுக மாணவர் அணியினர் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

DMK protests reservations in super speciality hospital

சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகள், அலுவலர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது சமூக நீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சி என்று சில தினங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி சாடியிருந்தார். மேலும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில், திமுக தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது என்று அவர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 21-ஆம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Days after criticising the ruling AIADMK over reservation in appointment of candidates to a multi-super speciality hospital here, DMK today announced it would stage a protest against the government on January 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X