பாளையங்கோட்டையில் திணறும் மைதீன்கான்.. 3வது இடத்தில் திமுக: நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
சென்னை: பாளையங்கோட்டை தொகுதியில் திமுகவில் வேட்பாளர் பிரச்சினை இன்னும் நீடிப்பதால் அங்கு திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இத்தொகுதியில் திமுக வேட்பாளராக டிபிஎம் மைதீன் கான் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு அங்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இன்னும் கூட பிரச்சினை முடியவில்லை. தொடர்ந்து திமுகவில் அவரை எதிர்த்து வருகின்றனர்.

தற்போது இந்தப் பிரச்சினை தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும் அபாயம் எழுந்துள்ளது. அதாவது திமுகவுக்கு இங்கு 3வது இடமே கிடைக்கும் நிலை இருப்பதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இங்கு அதிமுகவுக்கு 37.3 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தேமுதிக இங்கு 2வது இடத்தைப் பிடிக்கிறது. அக்கட்சிக்கு 26.5 சதவீத ஆதரவு காணப்படுகிறது. திமுகவுக்கு வெறும் 20.6 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications