“குடிதேஷ் கோமாளி”.. மிஸ்டர் சீமான்! திமுக ராஜீவ் காந்தி கடும் சாடல் - ஓபிசி பற்றி ஆதாரத்துடன் பதில்
சென்னை: ஓபிசிக்கு தவறான விரிவாக்கத்தை கொடுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கர்நாடகாவில் தமிழ் சாதியினரை ஓபிசி பிரிவில் சேர்க்க சொல்வேன் என்று கூறிய நிலையில், ஏற்கனவே தமிழ் சாதியினர் அந்த பிரிவில்தான் உள்ளனர் என்று ஆவணங்களுடன் ட்விட்டரில் சீமானை விமரித்து இருக்கிறார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய அவர், "நான் ஆட்சிக்கு வந்த உடனே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவேன்.

தமிழ்நாட்டில் உள்ள ரெட்டியாருக்கு இடஒதுக்கீடு கொடுப்பேன். தெலுங்கு செட்டியாருக்கும் இடஒதுக்கீட்டை வழங்குவேன். கன்னட செட்டியாருக்கும் அ. நாயுடுவுக்கும் அளிப்பேன். எல்லோருக்கும் கிடைக்க செய்வேன். ஆந்திராவுக்கு செல்வேன். கர்நாடகாவுக்கு போவேன். இங்கு இருக்கிற கன்னடர்களுக்கு நான் இடஒதுக்கீடு கொடுத்து உள்ளேன். அதேபோல் கர்நாடகாவில் ஒன்றே கால் கோடி தமிழன் இருக்கிறான்.
அவனை நீங்கள் ஓபிசியில் வைத்து உள்ளீர்கள். Out of Backward என்று வைத்து இருக்கிறீர்கள். நான் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு வழங்கியதைபோல் நீயும் கொடு என்று சொல்வேன்." என்றார். மத்திய அரசால் இடஒதுக்கீட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட பிரிவுகளில் ஒன்று ஓபிசி. ஓபிசி என்றால் Out of Backward என்று சீமான் கூறி இருக்கிறார். ஆனால், Other Backward class என்பதே அதன் சரியான விரிவாக்கம்.

சீமானின் இந்த பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் ஓபிசி விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது ஆவேசமாக சீமான், தகாத வார்த்தைகளால் ஒருமையில் அவரை சாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகியும், தற்போது மாணவர் அணி தலைவராகவும் உள்ள ராஜீவ் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள பதிவில், "கார்நாடகாவில் உள்ள கொங்கு வேளாளர், முதலியார், உடையார் உள்ளிட்டவர்கள் - OBC தான்!

ஆந்திராவில் உள்ள வன்னியர், முதலியார், மீனவர் உள்ளிட்டவர்கள் - OBC தான்! கேரளாவில் நாடார், தேவர், கொங்கு வேளார் உள்ளிட்டவர்கள் - OBC தான்! தமிழ்நாட்டில் உள்ள MBC, BC (பிற்பட்ட வகுப்பினர்) மக்கள் மற்ற மாநிலங்களில் OBC தான்! இந்த குடிதேஷ் கோமாளி சீமானுக்கு யாராவதும் சொல்லுங்க." என்று குறிப்பிட்டு இருந்தார்.

மற்றொரு பதிவில், "மிஸ்டர் குடிதேஷ் கோமாளி சீமான் அவர்களே!! மறவர், வன்னியர், கோனார், நாடார் இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? இல்ல கர்நாடக அரசு தமிழ்நாட்டில் உள்ள எல்லா பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும் OBCனு சொல்லி இட ஒதுக்கீடு கொடுத்து இருக்காங்களே அதான் கேட்டேன்!! மொழிக்கு இல்லை வகுப்புக்கு தான் இட ஒதுக்கீடு மிஸ்டர் சீமான்!!" என்று கூறி கர்நாடக மாநில இடஒதுக்கீடு ஆவணங்களையும் வெளியிட்டு உள்ளார்.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications