"அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கல.. பிரியாணிதான் வாங்கினார்.." படத்தை வெளியிட்ட திமுக ராஜீவ் காந்தி
சென்னை: அண்ணாமலை தனது ரபேல் வாட்ச் பில்லை இன்று வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பலரும் அந்த பில் குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், திமுகவின் ராஜீவ் காந்தி சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் திமுகவினரின் சொத்து பட்டியல் என்று கூறி ஒரு எக்ஸல் சீட்டை வெளியிட்டார்.
அதில் பல்வேறு திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு என்று கூறி பல பாயிண்டுகள் இருந்தது. அதேபோல அண்ணாமலை தனது ரபேல் வாட்ச் குறித்தும் இந்த பிரஸ் மீட்டில் பேசியிருந்தார். அதுதான் இப்போது டிரெண்டிங் டாப்பிக்காக உள்ளது.

ரபேல் வாட்ச்: கடந்தாண்டே அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் குறித்த இணையத்தில் பெரும் விவாதம் எழுந்தது. அப்போதே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ரபேல் வாட்ச் பில்லை வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலுடன் தனது ரபேல் வாட்ச் பில்லையும் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இது அப்போதே பரபரப்பை கிளப்பியிருந்தது.
அண்ணாமலை கையில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் பெல் அண்ட் ராஸ் என்ற நிறுவனம் தயாரித்த வாட்ச் ஆகும். இதன் இந்திய மதிப்பு 4.40 லட்சம் ரூபாய் ஆகும். இந்த ரபேல் வாட்ச் குறித்து இன்று பேசிய அண்ணாமலை, "சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நபரிடம் இருந்து நான் ரபேல் வாட்சை வாங்கினேன்.. அவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். ரபேல் வாட்ச்சை அணிய வேண்டும் என்று விரும்பி, அவரிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன்.

பில் வெளியீடு: ரபேல் வாட்ச் வாங்கியதற்கான பில் அவரிடம் இருக்கிறது. அவரிடம் இருந்து நான் வாட்ச் வாங்கியதற்கான பில்லும் இருக்கிறது. இரண்டையும் இப்போது வெளியிட்டுள்ளேன். போலீஸ் அதிகாரியாக இருந்தபோது லஞ்ச பணத்தில் ரபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் திட்டமிட்டு பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அதற்கான ஆதாரம் தான் இது.
ரபேல் வாட்ச் வரிசையில் 147ஆவது வாட்சை நான் வாங்கியிருக்கிறேன்.. இதற்காக தனியாக சீரியல் நம்பரும் இருக்கிறது. அதற்கு உரிய பில் இருக்கிறது. இதை வைத்து சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்" என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இப்போது அண்ணாமலையின் இந்த ரபேல் வாட்ச் குறித்தே இணையத்தில் திமுகவினர் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்ச்சை: அதாவது அண்ணாமலை வெளியிட்ட 2 பில்களிலும் சீரியல் நம்பர் வேறு வேறாக உள்ளதாக கூறி விமர்சித்து வருகின்றனர். அதாவது சேரலாதன் வாங்கினதாக சொன்ன வாட்ச் BRO394EBl147 என்றும் அண்ணாமலை சேரலாதனிடம் வாங்கினதாக சொன்ன வாட்ச் BRO394DAR147 என்று இருப்பதாக கூறி வருகின்றனர்.

மேலும், முன்பு அண்ணாமலை அளித்த பேட்டியில் தன்னிடம் இருப்பது 149ஆவது வாட்ச் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று 147ஆவது வாட்ச் என்று கூறிய நிலையில், அதையும் திமுகவினர் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே வாட்ச் வாங்க காசு கொடுத்ததாக அண்ணாமலையின் பாஸ்புக்கில் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று திமுகவின் ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார்.
பரபர அட்டாக்: இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "வாட்ச் காசு கொடுத்து தான் வாங்கினேன் அதையும் அக்கவுண்டுல மே 27-2021 ஆம் தேதி கொடுத்தேன் அப்படினு.. Bank passbookலாம் வெளியிட்டீர்களே.. மே27 பெங்களூர்ல நீங்க சாப்பிட்ட பிரியானி தான் passbookல இருக்கு! எங்கே தேடினாலும் நீரு கொடுத்த 300000ரூ உங்க அக்கோன்டுல இல்லையே.. எல்லாம் பொய்.. பிராடு.. பித்தலாட்டம்!" என்று விமர்சித்திருந்தார், அவரது இந்த ட்வீட் இணையத்தில் இப்போது வேகமாக பரவி வருகிறது.
-
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications