ஸ்டாலின் செல்லில் கருணாநிதியின் நெகிழ்ச்சிப் படம்.. எப்ப ரிலீஸ்... திமுக வெயிட்டிங்!
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தமது செல்போனில் பதிவு செய்துள்ள கருணாநிதியின் தற்போதைய புகைப்படங்கள் எப்போது வெளியாகும் என அக்கட்சி தொண்டர்கள் மட்டுமல்ல தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
முதுமையாலும் உடல்நலக் குறைவாலும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார் கருணாநிதி. அவ்வப்போது கருணாநிதி நலமுடன் இருக்கும் படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் அண்மையில் தம்முடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் சிவசங்கரின் தந்தையும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் நெகிழ்ச்சி
அப்போது சிவசுப்பிரமணியனிடம் தம்முடைய செல்போனில் பதிவு செய்யப்பட்ட கருணாநிதியின் தற்போதைய படங்களை காட்டி நெகிழ்ந்திருக்கிறார் ஸ்டாலின். இதுபற்றி சிவசங்கர் எழுதியிருப்பதாவது:

நலம் விசாரித்த ஸ்டாலின்
வீட்டுக்குள் நுழைந்த எனக்கே ஆச்சரியம். அப்பா வேட்டி, சட்டை, வாட்ச் அணிந்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். தளபதியை பார்த்த உடன் எழுந்தார்கள். பதறிப் போன தளபதி,"நீங்க உக்காருங்கண்ணா" என்றார். "எப்படி இருக்கீங்கண்ணே?". அப்பா நல்லா இருக்கேன் என கையால் சைகை காட்டினார்கள்.

செல்லில் கருணாநிதி படம்
"தலைவரை பத்தி தான் எப்பவும் கேட்டுகிட்டு இருக்காங்க", என்றார் என் அம்மா. "தலைவர் நலம் குறித்து என்னிடமும் கேட்கிறார்கள்", என்றேன். உடனே தளபதி தன் அலைபேசியை எடுத்தார். கேலரியை திறந்து கொண்டே," சமீபத்தில் எடுத்த தலைவருடைய புகைப்படம் இருக்கு. பாருங்கண்ணே", என்றவாறு அய்ந்து நிமிடம் பொறுமையாக தேடி எடுத்து அப்பாவிடம் காட்டினார்கள்.

கருணாநிதியும் தயாளு அம்மாளும்..
அப்பாவால், அந்தப் புகைப்படத்தை காணும் அரிய வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது. "அம்மா, அப்பாவ பார்க்கும் போது", என்றார் தளபதி. புகைப்படத்தில் தலைவர் கலைஞரும், தயாளு அம்மாள் அவர்களும் எதிரெதிராக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் காட்சி. தயாளு அம்மாள், தலைவர் கையை பற்றியிருக்கும் உணர்ச்சிமிகு புகைப்படம். படத்தை பார்த்த அப்பா லேசாக கலங்க, " தலைவர் கிட்ட நீங்க விசாரிச்சிங்கன்னு சொல்றேன். சென்னை வரும் போது சொல்லுங்க, தலைவர பார்க்க ஏற்பாடு செய்கிறேன்", என தளபதி சொல்ல, அப்பா கண்ணில் அவ்வளவு ஆனந்தம்.

தொண்டர்கள் மகிழ்ச்சி
இவ்வாறு சிவசங்கர் தம்முடைய ஃபேஸ்புக் பதிவில் எழுதியிருந்தார். இந்த தகவல் திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எப்போது ரிலீஸ்
அதற்கு முன்னதாக ஸ்டாலின் தம்முடைய செல்லில் இருக்கும் கருணாநிதியின் அந்த உணர்ச்சிமிகு படங்களை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் திமுக தொண்டர்கள்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications