விஜயகாந்துடன் பிரதமரைப் பார்க்க யார் யார் போகிறார்கள்?... மு.க. ஸ்டாலின் விளக்கம்
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சேர்ந்து கனிமொழி உள்ளிட்ட திமுக பிரதிநிகள் பிரதமரைச் சந்திப்பார்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா கட்டும் மேகதாது அணை தொடர்பாக கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து நாளை பிரதமர் மோடியை அவர் சந்திக்கிறார். அப்போது மற்ற கட்சிப் பிரமுகர்களும் அவருடன் செல்ல உள்ளனர்.

இந்நிலையில், விஜயகாந்துடன் சேர்ந்து பிரதமரை சந்திக்கும் திமுக நிர்வாகிகள் குறித்து விபரத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது :-
பிரதமரை விஜயகாந்த் சந்திக்கும்போது திமுக சார்பில் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் உடன் செல்வார்கள். மேகதாது பிரச்சனையில் விஜயகாந்த் எடுக்கும் முயற்சியை கலைஞர் பாராட்டினார். தமிழக பிரச்சனைகளை கொண்டு செல்ல வேண்டிய அதிமுக அரசு செயலற்றதாக உள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து கோபாலபுரம் சாரதா பள்ளியில் தேர்தல் அணையத்தால் நடத்தப்பட்ட சிறப்பு முகாமிற்கு வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சரிபார்த்து, தனது ஆதார் எண்ணை இணைப்பதற்கு விண்ணப்பித்தார் ஸ்டாலின்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications