இளைய தலைமுறை வாக்காளர்களை கவர அதி நவீனத்திற்கு அதிரடியாக மாறும் திமுக
தமிழகத்தின் இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் திமுக அதிநவீனமயமாகிறது.
சென்னை: திராவிட முன்னேற்றக்கழகம் அதிநவீனமாகி வருகிறது. இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணி புது உத்வேகத்துடன் கட்டமைக்கப்பட உள்ளது.
திமுகவில் தற்போது புதியதாக தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டுள்ளது. அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ.
திமுகவில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப அணிக்கு மாவட்ட அளவிலும் சட்டசபை தொகுதி வாரியாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அந்த அணியின் மாநில செயலாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

ஐடி அணி திமுக
ஐடி அணியை கட்டமைக்க மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது பற்றிய அறிவிப்பு முரசொலியில் வெளியாகியுள்ளது. ப்ளஸ் டூ படிப்புடன், கணினி அறிவும், எம்எஸ் வேர்ட், எக்ஸெல் தெரிந்திருக்க வேண்டும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி அணி மாநில செயலாளர்
மதுரை மத்திய தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட தியாகராஜன், திமுக ஐடி அணியின் முதல் மாநில செயலாளராவார். திமுக ஐடி அணியின் செயலாளராக அவர் பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் உலக அளவில் உள்ள அரசியல் கட்சியினர் ஐடி அணியை எந்த அளவிற்கு கையாளுகின்றனர் என்றும், தகவல் தொழில் நுட்ப பிரிவில் திமுகவின் செயல்பாடு பற்றியும் மிகப்பெரிய அளவில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயாரித்து கட்சி தலைமையிடம் அளித்துள்ளார்.

திமுக டேட்டா சென்டர்
அரசியல் கட்சியின் ஐடி அணி என்றாலே சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டரில் எழுதுவது மட்டுமே என்பது இல்லை. அதையும் மீறி நிறைய விசயங்கள் இருக்கின்றன என்கிறார் தியாகராஜன். திமுக சார்பில் டேட்டா சென்டர் போல தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாக்காளரையும் தொடர்பு கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.

இளம் தலைமுறை வாக்காளர்கள்
இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் அதி நவீனமாக தயாராகி வருகிறது திமுக. தமிழகத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அந்தந்த தொகுதி திமுக நிர்வாகிகள், திமுக எம்எல்ஏக்களிடம் கொண்டு சேர்ப்பது ஐடி அணியின் முக்கிய பங்காக இருக்கும் என்றும் கூறியுள்ளார் தியாகராஜன்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications