என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா... ‘சிங்கம்’ ஸ்டைலில் ஜெ.வுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லும் திமுக!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். முன்னதாகவே அவரது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளை திமுகவும் வித்தியாசமான முறையில் இன்றே "கொண்டாடி" விட்டது.
அதாவது, இன்றைய நாளிதழ்களில் திமுக சார்பில் ஒரு பக்க விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பார்த்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவில பார்த்திருப்பீங்க... நேர்ல பார்த்திருக்கீங்களா?' என சிங்கம் பட டயலாக் ஸ்டைலில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச் டயலாக்...
கூடவே, ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா..' என்ற பன்ச் வைத்து பட்டையைக் கிளப்பியுள்ளனர். தமிழ் செய்தித்தாள்களில் தமிழிலும், ஆங்கில செய்தித்தாள்களில் தங்கிலீஷிலும் இந்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

விளம்பரம்...
இது தவிர சன் டிவி மற்றும் கலைஞர் டிவியிலும் இது விளம்பரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பர்த்டே கிப்ட்...
இந்த விளம்பரமானது நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள ஜெயலலிதாவிற்கு திமுகவின், நமக்கு நாமே டீமின் பிறந்தநாள் பரிசு என சமூகவலைதளப் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஹேஷ்டேக் போட்டும் இதைப் பிரபலப்படுத்தி வருகின்றனர் திமுகவினர்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
நாளைக்கு தானே பிறந்தநாள், பிறகு ஏன் இன்றே பரிசு எனக் கேட்கிறீர்களா..? நாளை தான் அனைத்து செய்தித்தாளின் முதல் பக்கத்திலும் அதிமுகவினர் அம்மாவிற்கு வாழ்த்து கூற அட்வான்ஸ் புக் பண்ணியிருப்பார்களே. அதான் இந்த அட்வான்ஸ் பிறந்தநாள் பரிசு போல...!
|
நூதன பிரச்சாரம்...
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வித்தியாசமான முறையில் இந்த விளம்பரத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications