இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் கிடையாது... பினாயில்தான்....திமுகவின் கலக்கல் பிட் நோட்டீஸ்!
சென்னை: சென்னையில் ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து திமுகவினர் நடத்திய போராட்டத்தின்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் அனைவரையும் கலகலக்க வைத்தது.
அந்த துண்டுப் பிரசுரத்தில் இடம் பெற்றிருந்த வாசகங்கள்தான் இந்த கலகலப்புக்குக் காரணம்.
மைனாரிட்டி கருணாநிதி அரசு என்று ஜெயலலிதா வாய்க்கு வாய் கூறி வந்ததற்குப் போட்டியாக தற்போது தமிழக அரசை பினாமி அரசு என்று திமுகவினர் கூற ஆரம்பித்துள்ளனர்.

வடசென்னை திமுகவினர்
வட சென்னை மாவட்ட திமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

8வது வட்ட திமுக சார்பில்
இதில் 8வது வட்ட திமுக சார்பில் துண்டுப் பிரசுரங்கள்
விநியோகிக்கப்பட்டன. அதில் இடம் பெற்றிருந்த சில சுவாரஸ்யமான "ஸ்லோகன்கள்".

ஜெ பினாமி ஆட்சியில்
ஜெ பினாமி ஆட்சியில் பால் விலை உயர்ந்ததால் இனி எல்லாம் இப்படித்தான் என்பது அந்த துண்டுப் பிரசுரத்தின் தலைப்பாகும்.

இன்னிக்கு செத்தா
இன்னிக்குச் செத்தா நாளைக்கு பால் கிடையாது. பினாயில்தான் என்பது ஒரு வாசகம்.

அழுத குழந்தைக்கு
அழுத குழந்தைக்கு இனிமே புட்டி பால் கிடையாது. புட்டி தண்ணிதான் கொடுக்கனும்.

டீக்கடைகளில்
டீக்கடைகளில் பொதுமக்கள் இனி விரும்பி குடிக்கப்போவது கருப்பு டீ தான்.

முதலிரவுக்கும் கூட
முதலிரவுக்கு் கூட இனிமே பாலும் பழமும் இல்லை. வெறும் தண்ணியும் பாலும்தான்.

கடவுளுக்குக் கூட கிடையாது
கடவுளுக்குக் கூட இனி பால் அபிஷேகம் கிடையாது. வெறும் சுண்ணாம்பு தண்ணியத்தான் ஊத்தி ஏமாத்தனும்.

காவடி
இனி காவடி கூட பால் காவடி கிடையாது.

புது வீடெல்லாம்
புது வீடெல்லாம் இனி பால் காய்ச்ச மாட்டாங்க. சோப்புத் தண்ணிதான் காய்ச்சுவாங்க.. ஏன்னா அதில்தான் நுரை வரும்....

இதையெல்லாம் மாத்த
துண்டுப் பிரசுரத்தின் பன்ச்சாக.. இதனையெல்லாம் மாத்த யோசிங்க.. உதயசூரினை நேசிங்க என்று முடித்துள்ளனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications