சின்னத்திரையைக் கலக்கும் திமுக பிரசார விளம்பரங்கள்....!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் டிவி விளம்பரப் படங்கள் பரபரப்பாக படையெடுக்க ஆரம்பித்து விட்டன.
நாடக பாணியிலான இந்த விளம்பரப் படங்கள் தற்போது கலைஞர் டிவியை படு வேகமாக வலம் வந்து கொண்டுள்ளன.
ஒவ்வொரு துறையாக எடுத்து குறும்படம் போல தயாரித்து விளம்பரம் மூலம் பட்டையைக் கிளப்பி வருகிறது திமுக.

விலைவாசி உயர்வு
ஏமாந்தது போதும்... மாற்றத்திற்கான நேரமிது... என்ற தலைப்பில் விலைவாசி உயர்வு குறித்த விளம்பரம் இல்லத்தரசிகளின் கவலையைச் சொல்கிறது.

செயல்படாத அரசுக்கா உங்கள் வாக்கு?
புதிய வாக்காளர்களின் மன நிலையைச் சொல்லி, அவர்களது வாக்குகள் உதயசூரியனுக்கே என்று சொல்கிறது இன்னொரு விளம்பரம்.

மின்கட்டண உயர்வு
ஒரு யூனிட்டுக்கு 69 சதவிதம் மின்சாரத்தில் ஏற்றம்...என்ற தலைப்பில் மின் கட்டண உயர்வை ஒரு பிரசாரப் படத்தில் காட்டுகிறார்கள்.

சரியான ஆட்சியை தேர்ந்தெடுப்போம்..
பால் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கஷ்டங்களைச் சுட்டிக் காட்டுகிறது இந்த விளம்பரம்.

ஆட்டோ ஓட்டுநர்களின் சிரமம்
ஆட்டோ ஓட்டுநர்களின் சிரமத்தைச் சுட்டிக் காட்டி இன்னொரு விளம்பரம் வருகிறது.

படித்த படிப்புக்கேற்ற வேலை
படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலையை விவரிக்கிறது இந்த விளம்பரம்.

விவசாயிகள் ஏமாற்றம்
அதிமுக ஆட்சியில் விவசாயிகள் படும் கஷ்டத்தைச் சுட்டிக் காட்டுகிறது இன்னொரு பிரசாரப் படம்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காததால் ஏற்படும் அவலங்களை சொல்கிறது இன்னொரு பிரசாரப் படம்.

மாற்றுத் திறனாளிகளின் சிரமம்
அதிமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொகுத்து காட்டுகிறது இந்தப் படம்.

மீனவர்களின் சிரமம்
மீனவர்களுக்கு தகவல் தொடர்பு வசதிக்கு VHM ரேடியோ தருவேன் என்று சொன்னார்களே.! எங்கே? என்று கேட்கிறது இந்தப் படம்.

வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
முதியோருக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் சரியாக அமல்படுத்தப்படாததை சுட்டிக் காட்டுகிறது இந்த விளம்பரம்.

ஏழைகள் படும் பாடு
அதிமுக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகள் படும் பாட்டை சித்தரிக்கிறது இந்த பிரசாரப் படம்.

மின்வெட்டு அவலம்
அதிகரித்து வரும் மின்வெட்டுப் பிரச்சினையை ஒரு ஆஸ்பத்திரி சீனை வைத்துக் காட்டியிருக்கிறார்கள் இப்படத்தில்.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications