ஸ்டாலின் பிறந்தநாளுக்காக 3 நாள் லீவு... மீண்டும் தொடங்கியது திமுக நேர்காணல்
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்காக மூன்று நாட்கள் விடுமுறை முடிவடைந்த நிலையில், நேற்று மீண்டும் அக்கட்சியின் நேர்காணல் தொடங்கியது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஆயத்தப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அந்தவகையில், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது.

சென்னை அறிவாலயத்தில் கடந்த மாதம் 22ம் தேதி இந்த நேர்காணல் தொடங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மை செயலர் துரைமுருகன் ஆகியோர் நேர்காணல் நடத்துகின்றனர்.
முதல் ஆறு நாட்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நீலகிரி, ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், புதுக்கோட்டை, பெரம்பலுார் ஆகிய மாவட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.
பின்னர் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும், இரண்டாவது கட்ட நேர்காணல் நேற்று முன்தினம் துவங்கியது. அப்போது திருச்சி, அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டது.
நேர்காணலின் 8வது நாளான நேற்று நேற்று, 8வது நாளாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதுார், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய, எட்டு தொகுதிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்த, 137 பேரிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் இந்த நேர்காணல் வரும் 7ம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications