உதவி எண்ணைக் கொடுத்ததோடு நில்லாமல் வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களைக் காப்பாற்றி உதவிய திமுகவினர்
சென்னை: மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இரு உதவி எண்களை வழங்கிய திமுக அத்தோடு நில்லாமல், தனது கட்சியினரையும் களத்தில் இறக்கி உதவி கேட்டு அழைத்தவர்களைத் தேடிப் போய் உதவி செய்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் தத்தளித்த போது வெள்ள நீரில் சிக்கி்த் தவிப்போர் வசதிக்காக இரு உதவி எண்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். மழை வெள்ளத்தில் சிக்கிப் பாதிக்கப்பட்டோர் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு அழைத்தால் திமுகவினர் மீட்புப் பணிக்கு ஓடிவருவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பலரும் அந்த எண்களைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர். அவர்களுக்கு திமுகவினர் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்தனர்.
ஆயிரக்கணக்கில் உதவி கேட்டு அழைப்புகள் வந்ததாம். அவர்களிடம் முகவரி, அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினை உள்ளிட்டவற்றைக் கேட்டுக் கொண்டு, அந்தந்த பகுதி செயலாளர்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் கட்சியினருடன் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிந்துள்ளனர்.
இந்த மீட்பு முயற்சியின்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்துள்ளன. கர்ப்பிணி ஒருவரை மீட்ட திமுகவினர் அப்பெண்ணின் விருப்பப்படி அவரை சொந்த ஊரான கரூருக்கு அனுப்பி வைத்தனராம்.
இந்த உதவிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications