வளைத்து வளைத்து விஜயகாந்த் படமாகப் போடும் கேடிவி, சன் டிவி.. ஏன்??
சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மவுனம் காத்து வரும் நிலையில் திமுக ஆதரவு கே டி.வி. மற்றும் சன் டி.வி.யில் விஜயகாந்த் நடித்த படங்கள் அடிக்கடி ஒளிபரப்பாகி வருகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இட ஒதுக்கீடு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு வரவழைக்க திமுகவும், காங்கிரஸும் பெரு முயற்சி செய்து வருகிறது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ தங்கள் கூட்டணி வருமாறு விஜயகாந்திற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்து வருகிறார். செய்தியாளர்களை சந்திக்கும் போது எல்லாம் தேமுதிக திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு நிச்சயம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் திமுக ஆதரவு தொலைக்காட்சி சேனல்களான சன் டிவி மற்றும் கே டிவியில் விஜயகாந்த் நடித்த படங்கள் அடிக்கடி ஒளிபரப்பாகி வருகின்றன. அதுவும் அவரது அரசியல் இமேஜை கூட்டும் படங்கள் தான் ஒளிபரப்பாகின்றன.
மத்திய அமைச்சர் ஜவடேகர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ள நிலையில் கே டிவியில் இன்று இரவு 7 மணிக்கு விஜயகாந்த் நடித்த தர்மபுரி படம் ஒளிபரப்பாக உள்ளது.
விஜயகாந்த் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்காவிட்டாலும் தொடர்ந்து அவரது படங்களை ஒளிபரப்பு செய்து அவரை கவர முயற்சித்து வருகிறது திமுக. கூட்டணி முடிவை அறிவிக்காமல் அடம் பிடிக்கும் விஜயகாந்திற்கு படம் மேல் படம் போட்டுக் காட்டி மனதை மாற்ற முயற்சிக்கிறது திமுக.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications