2016 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுக்கும் திமுக... 50+50+134 ப்ளான்
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி ஒருபுறம்... கோஷ்டி சண்டை மறுபுறம் என திமுகவின் நிலை படுபாதளத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது.
கட்சியில் களையெடுப்பு ஒருபுறம் அரங்கேறினாலும் மறுபுறம் யார் யாருக்கு முக்கியத்துவம் தரலாம், யாரை மறுபடியும் உள்ளே சேர்க்கலாம் என்ற பேச்சும் ஒருபுறம் நடந்து வருகிறது.
அழகிரியை உள்ளே கொண்டுவரவும் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைத் தரவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல கனிமொழி, ஆ.ராசாவிற்கும் கட்சியில் முக்கியத்துவம் தரவும் முடிவு செய்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க கருணாநிதி தயாராகிவிட்டார் என்றே கூறப்படுகிறது.

கல்யாணசுந்தரத்தின் கலகக்குரல்
'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கனிமொழி, தயாநிதி, ராஜா ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்' என, முன்னாள் அமைப்புச் செயலாளர் கல்யாண சுந்தரம் எழுதிய கடிதம் அவருக்கே ஆப்பு வைத்தது. கலகக்குரலுக்காக கட்சியில் இருந்தே கல்தா கொடுக்கப்பட்டார்.

கனிமொழிக்கு எதிராக
காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க., சார்பில், கடந்த, 7ம் தேதி காட்டாங்கொளத்துாரில் தொண்டர்கள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, தி.மு.க., தொண்டர்கள் பலரும், ஊழல் விஷயங்களை குறிப்பிட்டு, கனிமொழியை கடுமையாக விமர்சித்தனர்.
இப்படி விமர்சித்தவர்கள் எல்லாம், ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

பதிலடிக்கு தயார்
அதற்கு பதிலடி கொடுக்க, கனிமொழி ஆதரவாளர்களும் தயாராகி வருகின்றனர்.இந்த நேரத்தில் கனிமொழிக்கும், ராஜாவுக்கும் பதவி கொடுத்து, முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், ஸ்டாலின் தரப்பினர் அடங்கிவிடுவர் என, திட்டமிட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார்.

கொ.ப.செ ஆகும் கனிமொழி
கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க முயற்சி நடைபெறுகிறது. அதன்படி, கனிமொழிக்கு கொள்கை பரப்பு செயலர் பதவியைதர திமுக,. மேலிடம் முடிவு செய்துள்ளது.

துணை பொதுச்செயலாளர்
ஆ.ராசாவுக்கு துணை பொதுச் செயலர் பதவியைம் வழங்க, கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரிடம், அவர் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2016 முதல்வர் வேட்பாளர்
2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற புதிய வியூகம் அமைக்கத் தயாராகிவிட்டார் தலைவர் கருணாநிதி. அதேசமயம், முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

ரகசியக்கூட்டம்
'கருணாநிதிக்கு, 90 வயதுக்குமேலாகி விட்டது. எந்த விஷயத்திலும், அவரால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை; கட்சி சம்பந்தமாகவும் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை. அதனால், கட்சியை ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றும் சமீபத்தில் ரகசிய கூட்டம் நடத்தி பேசியுள்ளனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள். இது தலைமையைக் கொதிப்படையச் செய்துள்ளதாம்.

அழகிரிக்கு 50
அழகிரியை மீண்டும் கட்சியில் இணைத்து தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை கொடுப்பதோடு 50 சட்டமன்ற தொகுதிகளை அவர்வசம் ஒப்படைக்கவும் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

கனிமொழிக்கு 50
கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் தருவதோடு மட்டுமல்லாது, வடமாவட்டங்களில் வன்னியர் சமுதாய வாக்குகளைக் கவரும் வகையில் 50 தொகுதிகளை அவர் பொறுப்பில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

ஸ்டாலின் 134
அதேசமயம் திமுக பொருளாளர் ஸ்டாலின் வசம் மீதமுள்ள 134 தொகுதிகளை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளாராம் கருணாநிதி.

பங்காளிகளுக்குள் ஒற்றுமை
இப்படி தொகுதிகளை பங்குபோட்டு வாரிசுகளிடம் ஒப்படைத்தால் மூவரும் ஒற்றுமையாக தேர்தல் வேலைகளை கவனிப்பார்கள் என்பது திமுக தலைவரின் கணக்கு. ஆனால் கட்சி முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கும் ஸ்டாலின் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.
-
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
2 முறை எம்எல்ஏவா இருந்தாச்சி.. இனி தம்பிக்கு விட்டு கொடு! திமுக வேட்பாளரிடம் கெஞ்சும் அதிமுக வேட்பாளர்! -
“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு! -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications