காவிரி பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் #cauvery
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
காவிரி பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும். கர்நாடகா, தமிழக முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், காவிரி பிரச்சினைக்காக தமிழக - கர்நாடக மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்; காவிரி பிரச்சினைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும் அதனை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications