வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா: அதிமுக மீது திமுக புகார்
சென்னை: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்குள்ள வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்த சம்பவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் தி.மு.க. தலைமைக் கழக வக்கீல் பரந்தாமன் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:
கோயம்புத்தூர் அ.தி.மு.க. வேட்பாளருக்காக கோவை மேயர் வேலுச்சாமி பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்கள் வீட்டுமனை பத்திரம் கேட்டு முற்றுகையிட்டதைத்தொடர்ந்து வீட்டு வசதி வாரியம் உத்தரவு பிறப்பித்து ஈரோடு, ஓசூர், மதுரை உட்பட பல இடங்களில் பணியாற்றிய ஊழியர்களை கோவை வீட்டுவசதி வாரியத்துக்கு அனுப்பி, ஏப்ரல் 30-ந் தேதிவரை பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றமாகும்.
வாக்காளர்களை கவருவதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே வீட்டுவசதி வாரியம், தனது ஊழியர்களை ஓரிடத்தில் இருந்து கோவை உட்பட மற்ற இடத்துக்கு பணியமர்த்துவதை தடை செய்ய வேண்டும்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்குள்ள வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்த சம்பவம், டி.வி. ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது.
மூக்குடி கிராமம் நரிக்குறவர் காலனியில் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுசம்பந்தமான சி.டி.யை சமர்ப்பித்துள்ளேன். ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியாளர்கள் இருப்பதற்கு இது ஒரு உதாரணம். எனவே அந்தத் தொகுதியின் வேட்பாளர் அன்வர் ராஜா மற்றும் ஓட்டுக்காக பணம் கொடுத்த அந்த கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications