அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: எதிர்க்கட்சி துணை தலைவரும் திமுகவின் மூத்த தலைவருமான துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: எதிர்க்கட்சி துணை தலைவரும் திமுகவின் மூத்த தலைவருமான துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

அவருக்கு சளித்தொல்லை அதிகமாக இருந்ததையடுத்து மருத்துவரைப் பார்த்து வீட்டிலேயே மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால், சளித்தொல்லை குறையாத காரணத்தால் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
துரைமுருகனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
துரைமுருகன் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்த பிறகு விரைவில் வீடு திரும்புவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications