முன்னாடில்லாம் எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேச மாட்டாரே.. துரைமுருகன் பேச்சால் சட்டசபையில் கலகல
Recommended Video

சென்னை: முதல்வரான பிறகு எடப்பாடி பழனிச்சாமி நிறைய பேசுகிறார் என்றும், இந்த வளர்ச்சி தனக்கு மகிழ்ச்சி என்றும், திமுக முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
சட்டசபையில் துரைமுருகன் இன்று ஆளும் கட்சியை கேலி செய்வதிலும், சில விஷங்களில் புகழ்ந்துரைப்பதிலும் பிஸியாக இருந்ததை பார்க்க முடிந்தது.
இதனால் இன்று அவையில் கலகலப்பான சூழல் நிலவியது.

கேக் வெட்டியது இல்லை
துரைமுருகனின் பல்வேறு கேள்விகளுக்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அளித்த பதில் தொகுப்பை பாருங்கள்: ரவுடிகளை கைது செய்தது அதிமுக அரசுதான், திமுக இதுபோன்று கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதில்லை என்று, துரைமுருகன் எழுப்பிய சட்டம் ஒழுங்கு சார்ந்த கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார். அதற்கு, "நாங்கள் கைது செய்யவில்லை என்றாலும், ரவுடிகள் கேக் வெட்டி கொண்டாடியது அதிமுக ஆட்சியில் தான்" என்று கிண்டல் செய்தார் துரைமுருகன்.

தமிழகம் முதலிடம்
வேளாண்துறையில் வளர்ச்சி இல்லை என கூறிய துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், உணவு தானிய விளைச்சலில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது என்றார். மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கையில் தமிழகத்தில் தொழில் குறைந்து வருவதாகவும், அண்டை மாநிலங்களில் வளர்ந்து வருவதாகவும் உள்ளது என்று துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்.

வழக்குகளால் தாமதம்
நிலம் கையகப்படுத்துவதில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், சாலைகள் அமைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது என்று தங்கமணி பதில் அளித்தார். இதனிடையே முதல்வர் சட்டசபையில் செயல்படும் விதம் குறித்து துரைமுருகன் பாராட்டு தெரிவித்தார்.

இவ்வளவு பேசமாட்டார்
பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி இவ்வளவு பேச மாட்டார் ஆனால் முதல்வரான பிறகு நிறைய பேசுகிறார். இந்த வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி என்றார் துரைமுருகன். மேலும், ஆட்சி மாறிய பிறகும் நிதித்துறை செயலாளர் மாற்றப்படவில்லை என்று துரைமுருகன் கூறினார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications