"நிரந்தர நீக்கம்" - மு.க. அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பியது திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பாக மு.க. அழகிரிக்கு திமுக உயர்நிலைக் குழு நோட்டீஸ் அனுப்பிவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அண்மையில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்து இருந்தார்.

ஆனாலும் தொடர்ந்தும் திமுக தலைமையை அழகிரி விமர்சித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது அழகிரி காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்.. 3 மாதத்தில் அவர் இறந்து விடுவார் எனக் கூறினார் என்றார்.

DMK sent show-cause notice to Azhagiri?

இதனால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொந்தளித்துப் போயினர். அழகிரியை கட்சியைவிட்டே நீக்கம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மு.க. அழகிரியை நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்கும் வகையில் திமுக உயர்நிலைக் குழு, உங்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது என ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்பி வைத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரியும் கூட, இப்படி ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக நானும் கேள்விபட்டேன் என்று கூறியிருந்தார்.

திமுக உயர்நிலைக் குழுவின் விளக்க நோட்டீஸுக்கு அழகிரி பதிலளிப்பாரா? அல்லது வேறு ஏதேனும் முடிவை அறிவிப்பாரா என்று காத்துக் கொண்டிருக்கிறது ஸ்டாலின் வட்டாரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+