போக்குவரத்து கழகத்தை சீரமைக்க அரசுக்கு ஆலோசனை தர டிஆர் பாலு தலைமையில் திமுக குழு-பொன்முடிக்கும் இடம்
போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு ஆலோசனை தர திமுக குழு ஒன்றை அமைத்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு ஆலோசனை தர திமுக குழு ஒன்றை அமைத்துள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான இக்குழுவில் பொன்முடியும் இடம் பெற்றுள்ளார்.
திமுக தலைமையகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், போக்குவரத்துக் கழகத்தை சீரமைக்க அரசுக்கு ஆலோசனை தர செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் இக்குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தொமுச சண்முகம், செங்குட்டுவன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் ஸ்டாலினிடம் அறிக்கை அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications