திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் !
சென்னை: திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக கட்சியின் சட்டத்துறை துணைச் செயலர் கே.எஸ்.ரவிச்சந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த மனு:

எங்களது கட்சியைச் சேர்ந்த பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, கடந்த 7-ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அதன் பின்னர் சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் அறிமுகமில்லாத பல்வேறு செல்போன் எண்களில் இருந்து லியோனி செல்போனுக்கு அழைப்புகள் வருகின்றன.
அந்த அழைப்பில் பேசும் நபர்கள், லியோனிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறு செய்யும் வகையிலும் பேசி வருகின்றனர். மேலும் தாங்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொண்டு, அன்புமணி ராமதாஸ் குறித்து பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது எனவும் கேட்டு மிரட்டுகின்றனர்.
அதேபோல சமூக வலைதளங்களிலும் லியோனி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே போலீஸார், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications