பொதுக்கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி தலைவரை நியமிக்காதது ஏன்?- திமுக வெளிநடப்பு
பொதுக்கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை நியமிப்பதே சட்டமன்ற மரபு. மரபை மீறி தலைவர் நியமிக்கப்பட்டதை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
சென்னை: 2016 - 17ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். அதன்படி 2016 - 17ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழுவுக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
இதுபோல் 2016 - 17ஆம் ஆண்டிற்கான பொதுக்கணக்கு குழுவுக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2016 - 17ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழுவுக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2016 - 17ஆம் ஆண்டிற்கான அவை உறுப்பினர் குழுவுக்கு 14 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சட்டசபை மரபை மீறி பொதுக்கணக்கு குழு தலைவரை நியமித்ததை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. பொதுக்கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை நியமிப்பதே சட்டசபை மரபு. மரபை மீறி தலைவர் நியமிக்கப்பட்டதை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
இதனிடையே தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications