திமுக ஆதரவு ஹேஷ்டேக் போட்ட உடன்பிறப்புகள்.. உள்ளே புகுந்து கலாய்த்த எதிர் தரப்பினர்
சென்னை: திமுகவுக்கு ஆதரவாக உடன்பிறப்புகள், டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்ட நிலையில், அதே ஹேஷ்டேக்கில், திமுகவின் எதிர்மறை விஷயங்களை அதிமுகவினரும், பிற கட்சி அனுதாபிகளும் பதிவிட்டனர். இதனால் டிவிட்டர் போர்க்களமானது.
தென் இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டவர்கள்தான் டிவிட்டரை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக, அஜித், விஜய், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள், டிவிட்டரை மோதல் களமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் டிவிட்டுகள் சூடு பறக்க தொடங்கியுள்ளன. திமுகவின் அருமை பெருமைகளை நாட்டு மக்கள் அறிய ஷேர் செய்யலாமே என்று நினைத்த திமுக அனுதாபிகள், #WhyILikeDMK என்ற பெயரில் ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் திமுக பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை பகிர தொடங்கினர்.
|
திருப்பியடித்த டேக்
இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி டாப் இடத்துக்கு வந்தது. இந்நிலையில்தான் அந்த விபரீதம் நடந்தது. பிற கட்சி அனுதாபிகளும், திமுக பிடிக்காதவர்களும், அதே ஹேஷ்டேக்கில் திமுக பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களை முன்வைத்தனர். ஒரு கட்டத்தில் நெகட்டிவ் விமர்சனங்களே அதிக அளவுக்கு பரவ தொடங்கியது.
சில பாசிட்டிவ், நெகட்டிவ் டிவிட்டுகளை பாருங்களேன்.
|
திட்டங்கள்
கருணாநிதி ஆட்சியில்தான் சாலை, பாலம் பணிகள் சிறப்பாக நடைபெற்றதாக கூறி, சில போட்டோக்கள் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
|
ஊனமிங்கு யாருமில்லை
உடல் ஊனம் என்ற வார்த்தையை நீக்கி, மாற்றுத்திறனாளி என்ற வார்த்தை புழக்கத்திற்காக, அரசாணை பிறப்பித்ததை வரவேற்கிறது இந்த டிவிட்.
|
மெட்ரோ
அயல்நாடுகளுக்கு இணையாக சென்னையை உருவாக்கும் ஸ்டாலின் உழைப்பால் கொண்டுவரப்பட்டது மெட்ரோ ரயில் திட்டம் என்று கூறுகிறது இந்த டிவிட்.
|
சமத்துவபுரம்
மாநிலம் முழுவதும் சமத்துவபுரம் நிறுவியது என்று கூறுகிறது இந்த டிவிட். சமத்துவபுரம் என்றால் என்ன என்று இப்போதுள்ள சமூகத்திற்கு மறந்தே விட்டது குறிப்பிடத்தக்கது.
|
அடாவடி
"கழகத்தின் கடைசி கவுன்சிலரையும் ஸ்கார்பியோவில் செல்ல வைத்ததற்காக" என்கிறது இந்த டிவிட். திமுக ஆட்சியில் அடிமட்ட நிர்வாகிகள் கூட குறுநில மன்னர்கள்போல நடந்துகொண்டதையும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானதையும் கேலியாக சொல்கிறார் போலும்.
|
மீத்தேன்
"மீத்தேன் திட்டத்தை ஏதோ மலைத்தேன் எடுக்கும் திட்டம் என்று நினைத்து கையெழுத்து போடும், ஒன்றுமறியாத அப்பாவிகள் என்பதால்" என்று கூறுகிறது இந்த டிவிட். மீத்தேன் திட்டத்தின் பாதிப்பு தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று ஸ்டாலின் கூறியதை கேலி செய்கிறது போலும்.
|
உடல் மண்ணுக்கு, உயிர்
குஷ்பூ, நக்மா போன்ற நடிகைகள் திமுக கூட்டணியில் இருப்பதால்தான் திமுக பிடிப்பதாக கிண்டல் செய்கிறது இந்த டிவிட்.
|
பகுத்தறிவு?
"இந்துக்களின் விடுமுறைதினங்களுக்கு வாழ்த்துச் சொல்லாத பகுத்தறிவுப்பாங்கு" என்று கேலி செய்கிறது இந்த டிவிட்.
|
டெல்லி தாக்குதல்
டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் டிவிட். 2ஜி ஊழல் காரணமாக திமுகவை பிடித்திருப்பதாக கேலி செய்கிறார் அவர்.












Click it and Unblock the Notifications