கருப்பசாமி பாண்டியன் மீதான பாலியல் புகார் விவகாரம் - மாலைராஜா திமுகவில் இருந்து சஸ்பென்ட்!
சென்னை: திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் கருப்பசாமி பாண்டியன் மீது பாலியல் புகார் கொடுத்த விவகாரத்தில் பின்னணியில் இருந்ததாக அக்கட்சியின் முன்னாள் மாநகர திமுக செயலர் மாலைராஜா சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி திமுக பிரமுகர் நாலடியாரின் மகள் தமிழரசி நெல்லை காவல்துறையில் நேற்று ஒரு புகார் கொடுத்திருந்தார்.

கேர்ள் பிரண்டாக இருக்க வேண்டும்
அந்தப் புகாரில், திமுகவில் பொறுப்பு வாங்கிக் கொடுக்க வேண்டுமெனில் தமக்கு கேர்ள் பிரண்டாக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன் வலியுறுத்தியதுடன் குற்றாலத்தில் தம்மிடம் வக்கிரமாகவும் நடந்து கொண்டதாக கூறியிருந்தார்.

கொலை மிரட்டல்
மேலும் கருப்பசாமி பாண்டியன் தரப்பில் இருந்து தமக்கு கொலை மிரட்டல் வழக்கு வருவதாகவும் அந்தப் புகாரில் தமிழரசி கொடுத்திருந்தார்.

கண்டுக்காத திமுக
திமுக தலைமைக்கு தாம் இந்தப் புகாரை 2 வாரத்துக்கு முன்பே அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாலேயே போலீசில் புகார் கொடுக்கப்படுவதாகவும் தமிழரசி குறிப்பிட்டிருந்தார்.

'க'னா மீது புகார் பதிவு
இந்தப் புகாரைத் தொடர்ந்து கருப்பசாமி பாண்டியன் மீது நெல்லை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கருப்பசாமி பாண்டியன் தரப்போ, கட்சியில் எதிராக இருக்கும் மாலைராஜாவின் தூண்டுதலின் பேரிலேயே இந்தப் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியது.

பின்னணியில் மாலைராஜா
இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கருப்பசாமி பாண்டியன் பெயருக்கு களங்கம் விளைவிக்க துணை போவதால் மாலைராஜா சஸ்பென்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாலைராஜா சஸ்பென்ட்
அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியை சேர்ந்த மாலைராஜா, மாநகர தி.மு.க. செயலாளராக செயல்பட்டு வந்த போது, நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தவுடன், மாநகர செயலாளர் பொறுப்பில் இருந்து விலகி, ஒதுங்கியிருந்து விட்டு, தற்போது தி.மு.க. கட்டுப்பாட்டை மீறியும், தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், குறிப்பாக மாவட்ட செயலாளரை தரக்குறைவாகவும், அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் செய்திகள் வெளிவருவதற்கு துணை போவதாக அறிவதால் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

மு.க. அழகிரி ஆதரவாளர்
தற்போது கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கும் மாலைராஜா மு.க. அழகிரியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications