கனிமொழி, ராசா, தயாநிதியை ஒதுக்கக் கோரிய கலியாணசுந்தரம் திமுகவில் இருந்து சஸ்பென்ட்!
சென்னை: கனிமொழி, ஆ. ராசா மற்றும் தயாநிதியை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அக்கட்சி அமைப்புச் செயலர் கலியாணசுந்தரம் முன்வைத்த கோரிக்கையை திமுக நிராகரித்துள்ளது. மேலும் கலியாணசுந்தரம் கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் திமுக அறிவித்துள்ளது.
திமுகவின் அமைப்புச் செயலராக இருந்த மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான பெ.வீ. கலியாணசுந்தரம் திடீரென்று தமது பதவியை ராஜினாமா செய்தார். தமது ராஜினாமா கடிதத்துடன் திமுக தலைவர் கருணாநிதிக்கு 5 கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தார்.

அதில் திமுகவில் இருந்து கனிமொழி, ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறனை ஒதுக்கி வைக்க வேண்டும்; மு.க.ஸ்டாலினை திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கைகள். இதேபோல் நில அபகரிப்பு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவர்களுக்கு கட்சி பதவிகள் வழங்கக் கூடாது என்றும் கலியாண சுந்தரம் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் இந்த கோரிக்கைகள் எதனையுமே ஏற்க திமுக மறுத்துவிட்டது. அத்துடன் பெ.வீ. கலியாணசுந்தரத்தை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
திமுகவில் இதுநாள் வரை மு.க.அழகிரி ஆதரவாளர்கள்தான் நீக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கட்சியின் அடுத்த தலைவராக கருதப்படும் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் ஒருவரும் நீக்கப்பட்டுள்ளது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications