மதிமுகவை உடைக்க நினைக்கும் திமுகவின் எண்ணம் நிறைவேறாது - ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: மதிமுகவை உடைக்க வேண்டும் என்ற திமுகவின் எண்ணம் வெற்றி பெறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தேமுதிகவும் பாஜகவுடன் நீடிப்பதா வேண்டாம் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அதேபோல் அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த, த.மா.கா.,விலும், மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நல கூட்டணியில் இணைவது குறித்து, அக்கட்சியினரும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அதனால் வாசனும் இந்த கூட்டணியில் சேர்வது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகர் தொகுதி, தா.பி.சத்திரம் பகுதியில் உள்ள 600 குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், மக்கள் நல கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில் மதிமுகவை உடைக்க நினைக்கும் திமுகவின் எண்ணம் வெற்றி பெறாது எனத் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications