For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"உதயசூரியனுக்கு" போட்டி அதிமுகவோ, பாஜகவோ அல்ல.. "குக்கர் தினகரன்" !!!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு போட்டி அதிமுகவே, பாஜகவோ அல்ல டிடிவி தினகரன்தான் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    பிரஷரில் வெடிக்கப்போவது யார் என்பது இன்னும் 2 வாரங்களில் தெரியும்.. மாஃபா பாண்டியராஜன் தடாலடி!

    சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவின் உதயசூரியனுக்கு டிடிவி தினகரனின் குக்கர் கடும் போட்டியாக அமைந்துள்ளது. இது பண்பாடு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது

    ஆர்.கே.நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் என 5 முனை போட்டி நிலவுகிறது.

    DMK vs TTV Dinakaran...Shocking results of RK Nagar By-Poll Survey

    அதிமுக, திமுகவிற்கு இடையேதான் கடும் போட்டி என்று கூறினாலும் திமுக, டிடிவி தினகரன் இடையேதான் கடும் போட்டி என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பண்பாடு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. திமுகவுக்கு 33% வாக்குகளும், டிடிவி தினகரனுக்கு 28% வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தகவல் கிடைத்துள்ளது.

    மேலும் அதிமுகவுக்கு 26% வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடிக்கும் என்றும், நாம் தமிழக கட்சி 2.18% , பாஜக 1.23% வாக்குகள் பெறும் என்றும் கருத்துக் கணிப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜகவை பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது கருத்துக்கணிப்பு.

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவின் உதயசூரியனுக்கும், டிடிவி தினகரனின் குக்கருக்கும் இடையேதான் கடும் போட்டி உருவாகியுள்ளது. இதெல்லாம் ஓவரா இல்லையா? என்று ஆர்.கே. நகர் வாக்காளர்கள் கேட்கின்றனர்.

    English summary
    DMK Vs TTV Dinakaran said panpadu Makkal thodarpakam survey in loyola college.survey conducted by former students of Loyola College in RK Nagar Constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X