காவிரி மேற்பார்வை குழுவை ஏற்க முடியாது- மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடும் போராட்டம்: திமுக
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் திமுக கடும் போராட்டத்தை நடத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: காவிரி மேற்பார்வை குழுவை ஏற்க முடியாது; மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் கடும் போராட்டம் நடத்தப்படும் என திமுகவின் ஈரோடுமண்டல மாநாட்டில் எச்சரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோட்டில் திமுகவின் மண்டல மாநாடு 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. இம்மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், 'காவிரி பிரச்சனையில் மத்திய- மாநில அரசுகளுக்கு இறுதி எச்சரிக்கை' என்ற தலைப்பில் தீர்மானம் ஒன்றை வாசித்தார்.
அத்தீர்மான விவரம்:
தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர் உரிமைக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கருணாநிதி, தமிழகத்தின் முதல்வராகவும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோது தான், கருணாநிதியின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிவிடாதபடி, காவிரி நீர் கிடைப்பதற்கும் தொடர்ந்து ஆவன செய்தது.

தமிழக அரசுக்கு திமுக ஆதரவு
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் எனக் காலக்கெடுவும் விதித்துள்ளது உச்சநீதிமன்றம். அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமென மதித்து, தமிழ்நாட்டை மேலும் வஞ்சித்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஏதேதோ சொல்லிக் காலம் தாழ்த்திவருகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு, மத்திய ஆட்சியாளர்களுக்குத் தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து ,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், இப்பிரச்சினையில் அரசியல் கருத்துவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திராவிட முன்னேற்றக் கழகம், மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகிறது.

காவிரி நதி நீர் ஆணையம் மீது விமர்சனம்
இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல்,காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில், 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது,தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாகப் பறித்து முறித்துப் போடுகின்ற பகிரங்கமான எதிர்மறைச் செயலாகும். கருணாநிதி முதல்வராகவும், பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராகவும் இருந்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், காவிரி நதி நீர் ஆணையம் என்கிற அமைப்பு பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டபோது, அதனைப் பல் இல்லாத ஆணையம்' என கேலியும் கிண்டலும் செய்தவர் அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா என்பதை காவிரி தீரத்து விவசாயப் பெருமக்கள் மறந்துவிடவில்லை.

பல் இல்லாத காவிரி மேற்பார்வை ஆணையம்
இன்று, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகி, அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், அவை அனைத்தும் நீர்த்துப் போகும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில், காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற, பல் இல்லாதது மட்டுமல்ல உயிரற்ற ஒன்றை மத்தியஅரசு', கர்நாடகத் தேர்தல் லாபம் என்ற குறுகிய அரசியல் நோக்கில் உருவாக்க முனைந்தால், அ.தி.மு.க. அரசு தைரியமாக இந்தப் பச்சைத் துரோகத்தை எதிர்த்து நின்று, மேற்பார்வை ஆணையத்தை நிராகரித்து, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில், சமாதானமற்ற அழுத்தமான உறுதி காட்ட வேண்டும். உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசிடம் எல்லா வகையிலும் வலியுறுத்த வேண்டும்.

மத்திய- மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை
மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறிகொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் உயிர் ஆதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக் கொடுத்து தெண்டனிட்டுக் கிடந்தால், தமிழக விவசாயிகளையும் வெகுமக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்டக் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென இந்த மாநாடு மத்திய-மாநில ஆட்சியாளர்களை இறுதியாக எச்சரிக்கிறது. இவ்வாறு திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
“காவிரி அரசியல் ஆயுதம் அல்ல!” கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு.. மாணிக்கம் தாகூர் கண்டனம்












Click it and Unblock the Notifications