சீக்கிரமே திமுக சந்தி சிரிக்கும்.. மு.க.அழகிரி சாபம்!
மதுரை: திமுகவில் நிறைய நடக்கிறது. அவை வெளியில் வரும்போது சந்தி சிரிக்கும். அது விரைவில் நடக்கும் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் படு தோல்விக்குப் பின்னர் திமுக எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக முன்னாள் அமைச்சர்களான முல்லைவேந்தன், பழனி மாணிக்கம் உள்ளிட்டோர் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது இதில் முல்லைவேந்தனை திமுக நிரந்தரமாக கட்சியை விட்டு நீக்கியுள்ளது. அதேசமயம், பழனி மாணிக்கத்தையும், தர்மபுரி வடக்கு மாவட்டச் செயலாளர் இன்பசேகரனையும் கட்சித் தலைமை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது.
இதுகுறித்து மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

அவரும் இதையேதானே சொன்னார்
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் முல்லைவேந்தன் என்ன கருத்தை சொன்னாரோ, அதே கருத்தைத்தான் கே.பி.ராமலிங்கம் எம்.பி.யும், கூறியிருந்தார்.

கரை வேட்டியுடன்தான் சொன்னார்
தி.மு.க. கரை வேட்டியை கட்டிக்கொண்டு தான் கே.பி.ராமலிங்கம் பேட்டியளித்தார். ஆனால் முல்லைவேந்தனை நீக்கிய கட்சி தலைமை கே.பி.ராமலிங்கத்தை நீக்கவில்லை.

ராமலிங்கத்தைப் பார்த்துப் பயப்படுகின்றனர்
அவர் ராஜ்ய சபா எம்.பி.யாக இருப்பதால் அவரை நீக்க பயப்படுகின்றனர். இதனால் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் குழப்பமே வரும்
கட்சியில் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் மேலும், மேலும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துமே தவிர சிக்கலை தீர்க்க உதவாது.

சந்தி சிரிக்கப் போகிறார்கள்
தி.மு.க.வில் இன்னும் நிறைய நடக்கின்றன. அவை வெளியில் வரும்போது சந்தி சிரிக்கும். அது கூடிய விரைவில் நடக்கும் என்றார் அழகிரி.
கே.பி.ராமலிங்கம் அழகிரியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications