4 தொகுதிகளில் அதிமுகவின் கூட்டணி கட்சிகளுடன் நேருக்கு நேர் மோதும் திமுக
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. எஞ்சிய 7 தொகுதிகள் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 4 தொகுதிகளில் திமுக நேரடியாக அக்கட்சிகளை எதிர்கொள்ள உள்ளது.
அதிமுக கூட்டணியில், மதுராந்தகம் (தனி) - செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), திருச்செந்தூர் - சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), காங்கேயம் - தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோல நாகப்பட்டினம் - தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), ஒட்டன்சத்திரம் - மனிதநேய ஜனநாயக கட்சி, கடையநல்லூர் - ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக்), திருவாடானை - கருணாஸ் - முக்குலத்தோர் புலிப்படை ஆகிய 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக அறிவிப்பு
இக்கட்சிகளும், அதிமுகவின், இரட்டை சிலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. இதனிடையே திமுக ஏப்ரல் 13ம் தேதி புதன்கிழமை, தங்கள் கட்சி போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

கூட்டணி கட்சிகள்
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மக்கள் தே.மு.தி.க., பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவபடை, தமிழ் நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

61 தொகுதிகள் கூட்டணிக்கு
இந்த கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. 173 தொகுதிகளில் களம் இறங்குகிறது.

திருச்செந்தூர் எப்படி?
திருச்செந்தூர் தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமாரை எதிர்த்து, திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார். இருவரும் ஒரே ஜாதி பின்புலம் கொண்டவர்கள் என்றபோதிலும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திருச்செந்தூர் தொகுதி மக்களிடையே தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளது.

மதுராந்தகம்
மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் செ.கு.தமிழரசனை எதிர்த்து, நெல்லிக்குப்பம் புகழேந்தி, திமுக சார்பில் களமிறங்க உள்ளார்.

ஒட்டன்சத்திரம்
ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணியிலுள்ள மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ சக்கரபாணி போட்டியிடுகிறார்.

கருணாசுக்கு எதிராக
திருவாடானை தொகுதியில் அதிமுக கூட்டணியின் கருணாசை எதிர்த்து, திமுக சார்பில் சு.ப.திவாகரன் போட்டியிட போட்டியிட உள்ளார். நாகப்பட்டினம், கடையநல்லூர், காங்கேயம் ஆகிய மூன்று தொகுதிகளில் திமுகவின் கூட்டணி கட்சிகள், அதிமுகவின் கூட்டணி கட்சிகளை எதிர்கொள்கின்றன.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications