Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.கே.நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கிறார் தினகரன்.. பரபரப்பு சர்வே முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆர்.கே.நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கிறார் தினகரன்.. பரபரப்பு சர்வே முடிவுகள்- வீடியோ

    சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 2வது இடத்தை பிடிப்பார் என்றும்
    பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

    இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பெரும் சர்ப்ரைஸ்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த கருத்து கணிப்பு, 7 வார்டுகளில், இளைஞர், இளம் பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பிலிருந்தும் மொத்தம் 1267 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.

    கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களை பாருங்கள்.

    திமுக முதலிடம்

    திமுக முதலிடம்

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக 33 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. எனவே அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. அதேநேரம், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு, 26 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைக்குமாம்.

    தினகரனுக்கு 2வது இடம்

    தினகரனுக்கு 2வது இடம்

    இதில் சர்ப்ரைஸ் என்னவென்றால், அதிமுகவைவிட டிடிவி தினகரனுக்கு அதிக வாக்குகள் கிடைக்குமாம். 28 சதவீதம் வாக்குகளை தினகரன் பெறுவார் என்கிறது இந்த கருத்து கணிப்பு. இந்த கருத்து கணிப்பு நம்பகத்தன்மையோடு இருக்கும்பட்சத்தில் அதிமுக வட்டாரத்தில் கிலி ஏற்படுவது உறுதி.

    பாஜக நிலை

    பாஜக நிலை

    இந்த கருத்து கணிப்பில் மற்றொரு சுவாரசிய தகவல் என்னவென்றால், ஆர்.கே.நகரில் நாம் தமிழர் கட்சி 2.18 வாக்குகளை பெறுமாம். அதேநேரம், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக வெறும் 1.23 சதவீத வாக்குகளையே பெறுமாம். 5.59 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு போகப்போகிறதாம். பிற 4 சதவீதம் என்று கூறப்படுகிறது.

    மக்கள் கருத்து

    மக்கள் கருத்து

    ஆர்.கே.நகரில் சட்டம் ஒழுங்கு மோசம் என்று 73 சதவீதம் பேர் கூறியுள்ளார்களாம். குடிநீர் வினியோகம் மோசம் என்று சுமார் 70 சதவீதம் பேரும், விலைவாசி மிக அதிகம் என்று 82 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளார்களாம்.

    தினகரனுக்கு ஆதரவு அதிகரிப்பு

    தினகரனுக்கு ஆதரவு அதிகரிப்பு


    பிரச்சினையை தீர்க்கும் தலைவர்கள் உள்ள கட்சி என்பதிலும் திமுகவுக்கு முதலிடமாம். 29.9 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியை உடனே கலைக்க வேண்டும் என்று பலரும் கூறியுள்ளார்ளாம். 0.53 சதவீதம் பேர்தான் ஆட்சி தொடர ஆசைப்படுகிறார்களாம்.
    கடந்த தேர்தலைவிட தினகரனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடியுள்ளது என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாம். கடந்த தேர்தலில் தினகரன் பணத்தை வாரி இறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேர்தல் ரத்தானது நினைவிருக்கலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+