எனக்கா அரசியல் நாகரிகம் இல்லை... தமிழிசைக்கு வாழ்த்து சொல்லி சர்ப்ரைசாக்கிய ஸ்டாலின்!!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அசத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்திற்கு பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்தார். அரசியலில் நீண்ட காலம் இருக்கும் ஒரு தலைவருக்காக எடுக்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்காதது ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் நாகரிகத்தை வெளிக்காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

மதவாத சக்திகளுக்கு கருணாநிதி வைரவிழா கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாது என்று திமுக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. இதே போன்று மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற அதிமுக அரசை பயன்படுத்துவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பாஜக தமிழகத்தில் கால்பதிக்க அதிமுகவை கேடயமாக பயன்படுத்துவதாக சொன்ன குற்றச்சாட்டு என்று அன்றாடம் மத்திய அரசு மீது ஸ்டாலின் வைக்கும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து வந்தார் தமிழிசை சௌந்தரராஜன். தமிழக அரசியலில் இவர்களின் அதிரி புதிரி சண்டை அரங்கேறாத நாளே இல்லை என்றும் கூட சொல்லாம்.
இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது 56வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாராம்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications