அடுத்து திமுக ஆட்சிதான்... பணபலம் தலைதூக்கினால் ராஜதந்திரத்துடன் எதிர்கொள்வோம்: துரைமுருகன்
உதகை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைக்கும்; தேர்தலில் பணபலம் தலைதூக்கினால் அதை திமுக ராஜதந்திரத்துடன் எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
உதகையில் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றி பிரகாசமாக தெரிகிறது. திமுகவினர் ஒற்றுமையுடன் இருந்து வெற்றியை பெற வேண்டும்.

திமுக ஆட்சி அமைக்க வேண்டும். கருணாநிதி முதல்வராக அமர வேண்டும். சட்டசபை தேர்தலில் பணபலம் தலைதூக்கினாலும் அதனை திமுக ராஜதந்திரத்துடன் எதிர்கொள்ளும்.
யாரோடு கூட்டணி என செய்தியாளர்களிடம் சொல்லமுடியாது. பத்திரிகைகள் மூலமாக ஒரு கூட்டணி அமைவது குறித்து முடிவு செய்தால் அந்த கூட்டணி உருப்படாது. கூட்டணி அமைப்பது என்பதெல்லாம் தேர்தல் ராஜதந்திரங்கள். கூட்டணி அமைவதில் ரொம்ப பெரிய டிப்ளமசி எல்லாம் கையாள வேண்டி இருக்கிறது. அதனால இவர்கள் இருப்பார்கள். அவர்கள் இருப்பார்கள்னு எல்லாம் சொல்ல முடியாது.
தேர்தல் அறிக்கையில் பல நல்ல அம்சங்கள் இருக்கிறது. அது ரகசியம். அதையும் இப்போது சொல்ல முடியாது.
நான் எம்.ஜி.ஆர். ஆட்சி காலம் முதல் சட்டசபையில் பங்கு பெற்றிருக்கிறேன். இப்போதைய சட்டமன்றத்தில் கருணாநிதிக்கு அடுத்து சீனியர் மோஸ்ட் மெம்பர் என்ற முறையில் சபையில் நான் இருக்கிறேன். நான் பார்த்தவரையில் பேச்சுரிமையே இல்லாத சட்டசபை இது தான். விளக்கத்தை கேட்க கூட விடமாட்டார்கள். ஏதாவது ஒன்று பேசினால் குறுக்கீடு என வர்ணனையோடு ஆரம்பித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்











Click it and Unblock the Notifications