13ம் தேதி சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
சென்னை: திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி அன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள "அன்பகத்தில்" திமு கழக பொருளாளரும், மாநில இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், அசன் முகமது ஜின்னா, ஜி.சுகவனம், ஐ.பி.செந்தில்குமார், சுப.சந்திரசேகர் மற்றும் பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கினறனர்.
இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் இளைஞரணியை வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக தென் மாவட்டத்தில் திமுக இளைஞரணியை மிகவும் துடிப்பாக வைத்திருப்பது என்றும், சட்டசபை தேர்தலுக்கு இப்போது முதலே இளைஞரணியை தயார்படுத்தும் விதமாக ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிய வருகின்றது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications