'அம்மா'வுக்காக அதிமுகவினர் பரிகாரம்: கறி விலை குறைந்த மாதிரி தெரியலையேப்பா!
சென்னை: அதிமுகவினர் வரும் 17ம் தேதி வரை அசைவம் சாப்பிடாமல் பரிகாரம் செய்தால் ஜெயலலிதாவுக்கு நல்லது என்று ஜோதிடர் கூறியுள்ள நிலையில் இறைச்சி விலை குறைந்தது போலத் தெரியவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான ஜெயலலிதா கடந்த 27ம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் அதிமுகவினர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்துவதை விட வரும் 17ம் தேதி வரை சுத்தபத்தமாக அசைவம் சாப்பிடாமல் பல்வேறு பரிகாரங்கள் செய்வது தான் அவருக்கு நல்லது என்று பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் குரு கோவிலில் பூஜைகள் செய்வதும் நல்ல பலன் அளிக்கும் என்று கூறியிருந்தார்.
ஜோதிடர் அறிவுரைப்படி அதிமுகவினர் இந்நேரம் அசைவம் சாப்பபிடுவதை நிறுத்தி இருந்தால் அவற்றின் விற்பனை பெருமளவில் சரிந்திருக்கும். டிமாண்ட் குறைந்திருந்தால் விலையும் குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறு இறைச்சி உள்ளி்டவற்றின் விலை குறைந்தது போலத் தெரியவில்லை.
தமிழகத்தில் அதிமுக உறுப்பினர்கள் 1 கோடி பேர் உள்ளனர் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில் 1 கோடி பேர் அசைவம் சாப்பிடாவிட்டால் அவற்றின் விலை நிச்சயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications