வாழ்க்கையையும் சினிமா போல் நினைத்தீர்களா? நடிகர் ஜெய்யை சரமாரியாக விளாசிய நீதிபதி!
நீதிமன்றத்தில் சரணடைந்த நடிகர் ஜெயிடம் வாழ்க்கையையும் திரைப்படம் போல் நினைத்தீர்களா என சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
Recommended Video

சென்னை: நீதிமன்றத்தில் சரணடைந்த நடிகர் ஜெயிடம் வாழ்க்கையையும் திரைப்படம் போல் நினைத்தீர்களா என சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி ஆப்பிரஹாம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
கடந்த மாதம் 21ஆம் தேதி அதிகாலையில் குடிபோதையில் தனது ஆடி காரை ஓட்டிச்சென்றார் நடிகர் ஜெய். அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த அவர் அடையாறு பாலத்தின் மீது மோதினார்.
இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார் ஜெய். குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மண்ணை தூவிவந்த ஜெய்
இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வழக்கில் ஆஜராகமால் தொடர்ந்து மண்ணை தூவி வந்தார் ஜெய்.

தலைமறைவான ஜெய்
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது.ஆனால் அவர் நேற்று வரை ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் சரண்
இதையடுத்து 2 நாட்களுக்குள் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ஜெய் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஜெய்யை விளாசிய நீதிபதி
அப்போது வாழ்க்கையையும் சினிமாபோல் நினைத்தீர்களா என நடிகர் ஜெயிடம் நீதிபதி ஆப்பிரஹாம் காட்டமாக கேட்டார். மேலும் கார் கண்ணாடிகளில் கறுப்புக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கறுப்பு ஸ்டிக்கருக்கு நடவடிக்கை
அதற்கு ஆமாம் என்று பதிலளித்தார் ஜெய். இதைத்தொடர்ந்து ஜெயின் கார் கண்ணாடிகளில் உத்தரவை மீறி கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது குறித்து ஏன் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் நீதிபதி விளாசினார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications