சென்னையில் வீடு வாங்க போறீங்களா? சொந்த வீடு கட்ட போறீங்களா? தமிழக வீட்டு வசதி வாரியம் அதிரடி.. மாஸ்
சென்னை: பொதுமக்களின் வசதிக்காக, இன்னொரு அதிரடியை தமிழக வீட்டு வசதி வாரியம் கையிலெடுத்துள்ளது.. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB), பொதுமக்களின் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டதாகும்.. புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் தரமான பொருட்களைப் பயன்படுத்தி அனைவருக்கும் வீடு வழங்குவதே இந்த வாரியத்தின் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது..

ஆன்லைன் வசதி: பொதுமக்களின் நன்மைகள், வசதிகளை கருத்தில்கொண்டு, இந்த துறையிலும், ஆன்லைன் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட, தடையின்மை சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
அதாவது, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு திட்டங்களில் நிலம், வீடு வாங்கியவர்கள், அதை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற நினைத்தால், அதற்கு வாரியத்திடம் தடையின்மை சான்றிதழ்களை கட்டாயம் பெற வேண்டும். வாரிய திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களில், அதன் உரிமையாளர்கள் வீடு கட்ட வேண்டும் என்றாலும்கூட, இந்த தடையின்மை சான்றிதழ்களை வாங்க வேண்டும்.
முறைகேடுகள்: இந்த தடையின்மை சான்றிதழை பெற வேண்டுமானால், கோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் நிலைமை மட்டுமே இதுநாள் வரை நடைமுறையில் இருந்து வருகிறது.. தற்போது, சில முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, இதற்காகவே, ஆன்லைன் வசதி துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி, apply.tnhb-noc.com என்ற இணையதளம் வாயிலாக, பொதுமக்கள், தங்களுடைய விபரங்களை பதிவு செய்து, தடையின்மை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய வெப்சைட்: இந்நிலையில், வீட்டுவசதி வாரிய திட்டங்களில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் விபரங்களை எளிதாக அறிய, புதிய இணையதளம் ஒன்று பிரத்யேகமாக துவக்கப்பட்டிருக்கிறது..
எப்போதுமே, வீட்டுவசதி திட்டங்கள் குறித்த விபரங்களை பொது மக்கள் அறிவதில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன... அதனால், கோட்ட அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், வீடுகள் இருப்பு அறிய, அந்த அலுவலகத்தை பொது மக்கள் அணுக வேண்டியிருக்கிறது.. அப்படியே அணுகினாலும், அங்குள்ள பணியாளர்கள் முறையான விபரங்களை தருவதில்லையாம்.
வாடகை வீடுகள்: மேலும், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்துவதிலும், வாடகை செலுத்துவதிலும் சிக்கல்கள் உருவாகின்றன.. இதற்காகவே, சில வருடங்களுக்கு முன்பு, வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக, ஒரு இணையதளம் துவக்கப்பட்டது. அதில் முழுமையான விபரங்கள், பொது மக்களுக்கு கிடைப்பதில்லை என்று புகார் எழுந்ததையடுத்து, அந்த வெப்சைட் முடங்கிவிட்டது. அதனால்தான், இப்போது, இன்னொரு புதிய வெப்சைட்டை வீட்டுவசதி வாரியம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, tnhb.tn.gov.in என்ற பெயரில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.. வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் துவக்கி வைத்திருக்கிறார். இனிமேல், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான விவரங்களை இந்த வெப்சைட் மூலம் பெற்றுக்கொள்வார்கள் எஎன்று நம்பப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications