விஷாலிடம் அசையா சொத்துக்கள் இல்லையாம்.. ஆனால் ரூ.7.5 கோடி அடமானக் கடன் இருக்காம்!
நடிகர் விஷாலுக்கு சொத்துக்கள் இல்லையாம், ஆனால் அவருக்கு ரூ.7.5 கோடி அடமானக் கடன் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆர்.கே.நகரில் போட்டியிடவுள்ள விஷால் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்புகள் விவரங்கள் முரண்பாடாகவே உள்ளது. பெரும்பாலும் 95 சதவீதம் கார்களின் மதிப்பையே அவர் கணக்கு காட்டியுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக இருந்தது. இதில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதில் தனக்கு அசையும் சொத்துகளாக ரூ.1.06 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த மதிப்பில் பெரும்பாலும் 95 சதவீதம் காரின் மதிப்பே உள்ளது. ஜாக்குவார், பிஎம்டபிள்யூ உள்பட 4 கார்களின் விலை ரூ.1 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அசையா சொத்துகள் ஏதும் இல்லை என்றும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ரூ. 7.5 கோடி அளவில் அடமானக் கடன் உள்ளதாக தெரிவித்துள்ள விஷால் எதை அடமானம் வைத்தார் என்பதை குறிப்பிடவில்லை.
தன்னிடம் சொத்துகளை இல்லை என்று குறிப்பிட்ட நிலையில் அடமானக் கடன் குறித்த விவரம் முரண்பாடாகவே உள்ளது. இதனால் அவரது சொத்து மதிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications