ஆஹா.. ஆஸ்கர் கேடயம் ஷேப்பில் வறுத்த மீன் முதல் விருந்தினர்களை திணறடித்த உணவு மெனு இதோ!
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட விருந்து என்ன தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்ட விருந்தில் ஆஸ்கர் விருது கேடயம் போன்று வறுத்த மீன் உணவுகள் பரிமாறப்பட்டன.
95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி தியேட்டரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 5 விருதுகளைத் தட்டிச்சென்றது.
இதில் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கரை வென்றார். தமிழ் ஆவணப்படமான 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' படமும் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. இந்த படம் தமிழகத்தில் உள்ள முதுமலை காட்டில் எடுக்கப்பட்டது.

7 விருதுகள்
அது போல் Everywhere Everywhere All at Once எனும் படம் 7 விருதுகளை அள்ளிச் சென்றது. இந்த விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பிரத்யேகமான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்துக்கான மெனுவை தயாரித்தவர் மூத்த செஃப் வொல்ப்காங் பக் (Wolfgang Puck) ஆவார். இவர் 29 ஆவது ஆண்டாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு மெனுவை தயாரித்து வருகிறார்.

எச்சிலை வரவழைக்கும் உணவுகள்
ஆடம்பரமான இந்த விருந்தில் எச்சிலை வரவழைக்கும் சுவையான உணவுகளும் சிறந்த வெளிநாட்டு மதுபானங்களும் இடம் பெற்றிருந்தன. பிரிட்டனை சேர்ந்த சமையல் கலைஞரான எலியட் க்ரோவர் தலைமையிலான 120 சமையல் கலைஞர்கள் ஆஸ்கர் விழாவுக்கான இரவு விருந்தை சமைத்தனர்.

சிக்கன்
இந்த உணவில் மீன், மாட்டிறைச்சி, சிக்கன், ஆட்டிறைச்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன, அது போல் பாஸ்தாக்களும் இருந்தன. ஆசிய உணவான வறுத்த கோழி பரிமாறப்பட்டது. அதிலும் ஆஸ்கர் விருது கேடயத்தின் வடிவில் தயாரிக்கப்பட்ட சால்மன் மீன்கள் உணவாக பரிமாறப்பட்டன. இவை தந்தூரி முறையில் செய்யப்பட்டிருந்தன. 1500 க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு விருந்து பரிமாறப்பட்டன.

முட்டைகள்
அது போல மியாசாகி வாக்யூ , 2000 முட்டைகள், வாத்து கறி, உருளைக்கிழங்கும், சிக்கன், உள்ளிட்டவையும் உணவில் இடம்பெற்றன. இந்த ஆஸ்கர் விருந்து மெனுவில் அவரவர் விரும்பும் உணவுகள் இருந்ததால் விருந்தினர்கள் உண்டு மகிழ்ந்தார்கள். அது போல் 29 ஆண்டுகளாக சமைக்கு செஃப் பக், எப்போதும் ஒரே மாதிரியான உணவை தயாரிக்கமாட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான உணவை தயாரிப்பாராம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications