தமிழ்நாடு அரசின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? 2026 நிலவரம் என்ன?
சென்னை: தமிழ்நாடு அரசுக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு வருமானம் வருகிறது, எந்தெந்த துறைகள் மூலம் அதிகப் பணம் கிடைக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் நாம் பார்ப்போம். 2025-26 நிதியாண்டின்படி, தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் (Revenue Receipts) ₹3,31,569 கோடி ஆகும். இதனை ஒரு வருடத்தின் 365 நாட்களோடு வகுத்துப் பார்த்தால், தமிழக அரசின் ஒரு நாள் சராசரி வருமானம் மட்டும் சுமார் ₹908 கோடி என்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கூறியுள்ளார். மகளிர் உரிமை தொகை 2500, தங்கம், தாய் மாமன் மோதிரம், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி தொகை என பல திட்டங்களை கூறியுள்ளார். இந்த திட்டங்களை நிறைவேற்றும் அளவிற்கு போதிய நிதி உள்ளதா என்றால் ஓரளவே இருக்கிறது. அதேநேரம் கடனுக்கான வட்டிக்காக அதிக அளவில் பணம் செலவாகி வருகிறது. எனினும் இந்த பதிவில் தமிழ்நாடு அரசின் கஜானாவை நிரப்பும் அந்த முக்கிய வருவாய் மூலங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்:

1. முதலிடத்தில் ஜிஎஸ்டி (GST / வணிக வரி)
தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாயில் சிங்கப்பங்கைக் கொடுப்பது வணிக வரிதான்.
வருமானம்: ₹1,21,853 கோடி
சதவீதம்: 36.8%
மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 3-ல் 1 பங்கு ஜிஎஸ்டி மூலமாகவே கிடைக்கிறது.
2. மத்திய அரசின் வரிப் பங்கு (Share in Central Taxes)
மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து தமிழகத்திற்குப் பிரித்துக் கொடுக்கப்படும் பங்கு இதில் இரண்டாவது பெரிய பங்களிப்பாக உள்ளது.
வருமானம்: ₹66,543 கோடி
சதவீதம்: 20.1%
3. டாஸ்மாக் மற்றும் மதுபான வரி (TASMAC & Excise Duties)
தமிழகத்தில் அதிக விவாதங்களைக் கிளப்பும் மதுபான விற்பனை மற்றும் அதற்கான வரி வருவாய் அரசாங்கத்தின் 3-வது பெரிய வருவாய் மூலமாகும்.
வருமானம்: ₹39,478 கோடி
சதவீதம்: 11.9%
4. பெட்ரோல் & டீசல் மீதான வாட் வரி (Petrol & Diesel VAT)
வாகன எரிபொருட்கள் மீதான மாநில அரசின் வரி விதிப்பு மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.
வருமானம்: ₹38,572 கோடி
சதவீதம்: 11.6%
5. இதர முக்கிய வருவாய்கள்:
இவை தவிர, அரசின் பிற துறைகள் மூலமாகவும் கஜானாவிற்குப் பணம் வந்து சேருகிறது:
பத்திரப்பதிவு துறை வருவாய்: ₹25,067 கோடி (7.6%)
வாகன வரி (RTO): ₹11,617 கோடி (3.5%)
மத்திய அரசின் நிதியுதவி (Grants-in-Aid): ₹10,590 கோடி (3.2%)
மின்சார வரி (Electricity Duty): ₹9,180 கோடி (2.8%)
பிற வருவாய்கள் (கட்டணங்கள், அபராதங்கள் போன்றவை): ₹8,669 கோடி (2.5%)
தமிழக அரசின் ஒரு நாள் வருவாயான ₹908 கோடியில், சுமார் ₹334 கோடி ஜிஎஸ்டி மூலமும், ₹108 கோடி டாஸ்மாக் மூலமும், ₹105 கோடி பெட்ரோல்-டீசல் வரி மூலமும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தரவுகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ 2025-26 பட்ஜெட் ஆவணங்களின்படி கணக்கிட்டுள்ளோம்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications