திண்டுக்கல் நந்தினி ஸ்கூலில் வாங்கிய குறைந்த மதிப்பெண் என்ன தெரியுமா? அப்போ "600-க்கு 600 எப்படி?"
திண்டுக்கல்: சின்ன வயதில் இருந்தே திண்டுக்கல் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் நந்தினி இதுவரை அவர் வாங்கிய குறைந்த மதிப்பெண் என்ன தெரியுமா?
திண்டுக்கல் அண்ணாமலையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அந்த மாவட்டத்தில் பிரபலமான பள்ளி. தற்போது கடந்த சில தினங்களாக செய்திகளில் வந்து மேலும் பிரபலமாகி வருகிறது. இந்த பள்ளியில் படித்த நந்தினி என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
இவருக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்தன. இந்த மாணவியை போனில் அழைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டியிருந்தார். அது போல் அமைச்சர் ஐ பெரியசாமி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

நந்தினி அண்மையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். அவருக்கு நிறைய உதவிகளும் பாராட்டுகளும் குவிகின்றன. கால்குலேட்டர், செல்போன, வாட்ச் உள்ளிட்ட பரிசுகளை தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள். தனியார் பள்ளியில் படித்தால்தான் அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்ற பெற்றோர்களின் நினைப்பை இந்த நந்தினி தவிடுபொடியாக்கினார்.
தனியார் பள்ளிகளில் பயின்றோர் கூட சாதிக்க முடியாத சாதனையை நந்தினி படைத்துள்ளார். அதிலும் தந்தை தச்சு தொழிலாளியாக இருந்து வருகிறார். வீட்டில் எத்தனை கஷ்டங்கள் இருந்திருக்கும். அதை எல்லாம் தாண்டி சரித்திர சாதனை படைத்துள்ளார் இந்த பெண். இவருக்கு தங்க பேனாவை பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து.
இந்த மாணவி பிளஸ் 2 வில் வணிகவியல் பிரிவு எடுத்திருந்தார். இவரை தங்கள் கல்லூரியில் சேர்க்க நிறைய கல்லூரிகள் போட்டி போட்டுக் கொண்டு அழைத்த நிலையில் அவரோ கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் B.com Professional Accounting சேர்ந்துள்ளார். இந்த படிப்புக்கான அனைத்து செலவையும் அந்த கல்லூரி நிர்வாகவே ஏற்றுள்ளது.
விடுதி கட்டணம், உணவு கட்டணம் உள்பட அனைத்துமே நந்தினிக்கு இலவசமாக வழங்க முன் வந்துள்ளது. இந்த நிலையில் நந்தினியின் தாய் பானுப்பிரியாவும் பிளஸ் 2 வரை இந்த பள்ளியில்தான் படித்தாராம். நந்தினி படிப்பில் மட்டும் சுட்டி அல்ல, கட்டுரை, பேச்சு, கவிதை என அனைத்திலும் கலக்குவாராம். இவையெல்லாமே அவரது தாய் கொடுத்த உத்வேகம். சிறிய வயதிலிருந்தே மேடை ஏற்றி இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வைத்திருக்கிறார்.
நந்தினிக்கு விளையாட்டில் ஆர்வம் கிடையாதாம். எப்போதும் படிப்பு படிப்பு என்றே இருந்துள்ளார். நந்தினியையும் அவருடைய பள்ளி முதல்வரையும்தனியார் யூடியூப் சேனல் பேட்டி எடுத்தது. அதில் நந்தினியிடம் சிறிய வயது முதல் இதே பள்ளியில் படித்து வருகிறீர்களே, இதுவரை நீங்கள் பெற்ற குறைந்த மதிப்பெண் எது என கேட்டபோது 93 என்றார் நந்தினி.

மொழி பாடத்தில் 93 எடுத்திருந்தேன். பொதுவாக அனைத்து பாடங்களில் 95 க்கு மேல் பெறுவேன். இதுவரை நான் வாங்கிய குறைந்த மதிப்பெண் என்றால் 93தான். இந்த முறை தமிழ், ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சி என்றார். இந்த நிலையில் பள்ளி முதல்வர் கூறுகையில் முதலில் பிளஸ் 2 ரிசல்ட் வந்ததும் இந்த மாணவியின் பதிவு எண், பிறந்த தேதியை போட்டு பார்த்தோம்.
அப்போது 600-க்கு 600 வாங்கியிருந்தார். எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே அனைத்து ஆசிரியர்களிடமும் பள்ளித் தாளாளரிடமும் போய் சொன்னேன். எல்லாரும் மகிழ்ந்தனர். நந்தினிக்கு ஒரு முறை 93 மதிப்பெண்களை கொடுத்திருந்தோம். பொதுவாக ஃபுல் மார்க் கொடுத்தால் ஓவர் கான்ஃபிடன்ஸ் வந்துவிடும். நம்மை பீட் செய்ய யாருமில்லை என நினைத்துவிடுவார்கள். அதனால்தான் மார்க்கை குறைத்தோம் என்றார். ஏம்மா நந்தினி 93 மதிப்பெண்களே உங்களுக்கு குறைவா?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications